போலி நாணயத்தாள்களுடன் இளைஞர் கைது!

Thursday November 08, 2018

கந்தளாய் மணிக்கூட்டு கோபுரத்தின் அருகில் வைத்து 5000 ரூபா போலி நாணயத்தாள்களுடன் இளைஞர் ஒருவர் நேற்று  மாலை கந்தளாய் காவல் துறையால்  கைதுசெய்யப்பட்டுள்ளார். 

தம்பளகாமத்தைச் சேர்ந்த 24 வயதுடைய அலி அக்பர் மொஹமட் ரஸ்தான் என்பவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். 

கந்தளாய் காவல் துறைக்கு போலி நாயணத்தாள் குறித்து கிடைக்கப்பெற்ற விசேட தொலைப்பேசி அழைப்பின் அடிப்படையில் கந்தளாய் நகரில் நேற்று முழுவதும் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போதே குறித்த இளைஞர் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். 

கந்தளாய் நகரின் மணிக்கூட்டு கோபுரத்தின் அருகில் வைத்து சந்தேகத்திற்கிடமாக குறித்த இளைஞரின் நடமாட்டத்தை அவதானித்த காவல் துறையினரால்  அவர் சோதனையிடப்பட்டார். இதன்போது அவரிடமிருந்த 5000 ரூபா நாணயத்தாள்கள் 10 சோதனைக்குட்படுத்தப்பட்டது. 

இதன்போது அவை அனைத்தும் போலி நாணயத்தாள்கள் என உறுதிப்படுத்தப்பட்டது.  மேலும் இச்சம்பவம் தொடர்பான தொடர் விசாரணைகளை கந்தளாய் காவல் துறையினர்  மேற்கொண்டுள்ளனர்.