பொங்கல் வாழ்த்துத் தெரிவித்துள்ளார் கனேடியப் பிரதமர்!

ஞாயிறு சனவரி 15, 2017

தமிழர்களின் பாரம்பரிய பண்டிகை நிகழ்வா தைப்பொங்கல் நேற்றைய தினம் உலகெங்கும் பரந்துவாழும் தமிழ் மக்களால் கொண்டாடப்பட்டுள்ளது. அந்தவகையில், கனடா நாட்டுப் பிரதமர் ஜஸ்ரின் ரூடோ தனது நாட்டில் வாழும் கனேடியத் தமிழ் மக்களுக்கு தமிழில் தைப்பொங்கல் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். குறித்த காணொளி இணையத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

அத்துடன்,கனடாவில் ஆண்டு தோறும் தை மாதத்தினை நாடளாவிய ரீதியில் தமிழர் மரபுகளை அனுஷ்டிப்பதற்குரிய மாதமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.