பொங்குதமிழ் நிகழ்வில் அணிதிரண்டதமிழ்மக்கள்!

Wednesday September 19, 2018

சிறிலங்காப்பேரினவாதஅரசினால் தொடர்ச்சியாகதமிழ் மக்கள் மீதுமேற்கொள்ளப்பட்டுவரும் இன அழிப்பிற்கு நீதிகேட்டு ஐ.நா நோக்கிய பொங்குதமிழ் மாபெரும் கவனயீர்ப்பு பேரணியில் ஆயிரக்கணக்கான தமிழ்மக்கள் கலந்து கொண்டதுடன்; தங்கள் தேசத்தின் மீதானபற்றுருதியைமீண்டுமொருமுறைஅனைத்துலகத்திற்கு இடித்துரைத்தார்கள்.

17.09.2018திங்கட்கிழமைஅன்றுசுவிஸ் நாட்டின் ஜெனிவாதொடரூந்துநிலையத்திற்குஅருகாமையில் உள்ளபூங்காவில் ஆரம்பிக்கப்பட்ட பொங்குதமிழ் கவனயீர்ப்புபேரணியானது உலகத்தமிழர்களின் ஒன்றுபட்ட உரிமைக்குரலாக ஒலிக்க,அவர்கள் தாங்கியபதாகைகள் மூலம்வேற்றினமக்களுக்குஎடுத்துரைத்து,நகர்ந்துஈகைப்பேரொளிமுருகதாசன் திடலைவந்தடைந்தது.

பொதுச்சுடரேற்றலுடன் ஆரம்பமாகியஒன்றுகூடலானதுதமிழீழத் தேசியக்கொடிவானுயரஏற்றப்பட்டு,தியாகதீபம் லெப். கேணல் திலீபன், ஈகைப் பேரொளிகளுக்குரிய ஈகைச்சுடர்களும் ஏற்றப்பட்டு மலர்மாலை அணிவித்தலுடன் அகவணக்கம் மலர்வணக்கத்துடன் உறுதிமொழியும் எடுக்கப்பட்டது.

புலம்பெயர் நாடுகளில் பிறந்து,வளர்ந்துவாழ்ந்தாலும் தமதுவேர்களைத் தேடிஅதன் இருப்புக்காகஉரத்துக் குரல்கொடுத்ததமிழ் இளையோர்களின் பங்கு இப்பேரணியில் சிறப்பாகஅமைந்ததுடன் தமதுவாழிடமொழிகளில் புலமைத்துவத்துடனும்,ஆளுமையுடனும் ஆற்றிய உரைகளுடன், சமகாலகருப்பொருளை உள்ளடக்கியதான வாள்ப்பாணம்  கருத்துவெளிப்பாடானதுமக்களின் மனதைகனக்கவைத்தது. 

குறிப்பிட்டசிலநாடுகளிலிருந்துபலநாடுகளுக்கூடாகமனிதநேயப் பிரச்சாரப் பயணங்களைஈருருளிமற்றும் ஊர்திகள் மேற்கொண்டமனிதநேயசெயற்பாட்டாளர்கள் தாம் பயணித்த நாடுகளில் சந்தித்தஅரசியல் பிரமுகர்களிடம் வரலாறு தங்களுக்குவழங்கியகடமையின் நோக்கத்தைஎடுத்துரைத்ததோடு,பொங்குதமிழ் பேரணியின் போது ஐ.நா மனிதவுரிமை ஆணையாளர் காரியாலயத்தில் அரசியற் சந்திப்பும் நடைபெற்றதுடன் பேரணிதொடர்பாககோரிக்கைகள் அடங்கியமனுவும் கையளிக்கப்பட்டது. ஈழத்தமிழர்களின் இன்றையநிலையும், இன்றும் தொடரும் கட்டமைப்புசார் இனவழிப்பில் இருந்துபாதுகாக்கவேண்டியஅவசியத்தையும் வலியுறுத்திப் பேசப்பட்டது.

தமிழீழம் என்றதேசம்தான் தங்கள் வாழ்வைவளமாக்கும் என்பதிலே உறுதிகொண்டிருந்த மக்கள், தேசத்தை மீட்டெடுக்க எல்லாவித  அர்ப்பணிப்புக்களையும் செய்யத் தயாராக இருப்பதாகதமிழீழத் தேசியத் தலைவருக்கும், மாவீரர்களுக்கும் உறுதிவழங்கி நம்புங்கள் தமிழீழம் நாளைபிறக்கும் என்றபாடலுடன் தமிழீழத் தேசியக்கொடி இறக்கப்பட்டு தமிழர்களின் தாரகமந்திரத்துடன,;தணியாததாகத்துடனும் மாவீரர் நாமத்துடனும் கலைந்து சென்றனர்.