பொதுபல சேனா மைத்திரிக்கு கடிதம்!

Thursday October 11, 2018

ஞானசார தேரரின் விடுதலையை வலியுறுத்தி பொதுபல சேனா அமைப்பு   சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளது.

அக்கடிதத்தில்,

"ஞானசார தேரர் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் கருத்துக்களை முன்வைக்கவில்லை எனவும், ஜனாதிபதி இவ்விடயத்தை கவனத்தில் கொண்டு விரைவில் அவரை விடுதலை செய்ய வேண்டும்.

தேரர் அன்று நீதிமன்றத்தில்  இராணுவ புலனாய்வு அதிகாரிகளை சிறை வைப்பதற்கு எதிராகவே அவர் கருத்து தெரிவித்தார்.   கருத்துக்களைத் தெரிவித்ததன் பின்னர் தான் தெரிவித்த கருத்துக்களில் ஏதேனும் தவறுகள் காணப்பட்டால் மன்னிக்குமாறும் ஞானசார தேரர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

பொய் சாட்சிகளை தெரிவித்தே ஞானசார தேரரை கைது செய்து சிறை வைத்துள்ளனர். ஆகவே இது தொடர்பில் நாட்டின் தலைவரான கவனம் செலுத்துவதோடு தாங்கள் நேரடியாக தலையிட்டு ஞானசார தேரரை விரைவில் விடுதலை செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றோம்." என குறிப்பிடப்பட்டிருந்தது.