பொது இடங்களில் மதச் சின்னங்களை அகற்றுமாறு உத்தரவு

திங்கள் டிசம்பர் 19, 2016

பிரான்ஸின் தென்பகுதி நக­ரான பப்­ளி­யரில் பூங்­கா­வொன்றில் உள்ள கன்னி மரியாள் சிலையை அகற்­று­மாறு அந்­ ந­கர மேய­ருக்கு நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டுள்­ளது.   

பொது இடங்­களில் மதச் சின்­னங்­களைக் காட்­சிப்­ப­டுத்­து­வ­தற்கு பிரான்ஸில் தேசிய ரீதியில் விதிக்­கப்­பட்­டுள்ள தடைக்கு இணங்க, இச் ­சி­லையை அகற்­று­மாறு நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டுள்­ள­தாக பப்­ளியர் நகர மேயர் கெஸ்டன் லக்­ரோயிக்ஸ் தெரி­வித்தார்.   
 
இச் ­சி­லையை பூங்­கா­வி­லி­ருந்து அகற்­று­வ­தற்கு 3 மாத கால அவ­காசம் விதிக்­கப்­ப­ட்­டுள்­ள­தா­கவும் அதற்­கி­டையில் இச்­ சிலை அகற்­றப்­ப­டா­விட்டால் நாளொன்­றுக்கு 100 யூரோ (சுமார் 15,800 ரூபா) வீதம் அப­ராதம் விதிக்­கப்­படும் எனவும் கடந்த 24 ஆம் திகதி நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டுள்­ளது.  
 
 2011 ஆம் ஆண்டு முதல் மேற்­படி பூங்­கா­வி­லி­ருக்கும் இச் ­சி­லையை, நீதி­மன்ற உத்­த­ர­வை­ய­டுத்து தனியார் காணி­யொன்­றுக்கு மாற்றுவதற்கு தீர்மானிக்கப் பட்டுள்ளதாக மேயர் கெஸ்டன் லக்ரோயிக்ஸ் தெரிவித்துள்ளார்.