பொது மன்னிப்புக் காலம் நீடிப்பு!

நவம்பர் 14, 2017

இராணுவத்திலிருந்து தப்பியோடியுள்ள ஊழியர்கள், மீண்டும் சேவையில் இணைந்துகொள்வதற்கோ அல்லது உத்தியோகபூர்வமன முறையில் சேவையில் இருந்து விலகிச் செல்வதற்கோ விடுக்கப்பட்டிருந்த பொதுமன்னிப்புக் காலம், எதிர்வரும் 22ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒக்டோபர் 23ஆம் திகதி முதல் அமுலுக்கு கொண்டுவரப்பட்ட இந்த மன்னிப்புக் காலம், நாளையுடன் (15) முடிவடையவிருந்த நிலையிலேயே, 22ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதென, இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் ரொஷான் செனவிரத்ன தெரிவித்தார்.

இவ்வாறு நடைமுறையில் உள்ள பொது மன்னிப்புக் காலத்தின் இதுவரையான நாள் வரையில், 8,052பேர் சரணடைந்துள்ளனர் என்றும், இராணுவப் பேச்சாளர் கூறினார்.

செய்திகள்
செவ்வாய் செப்டம்பர் 18, 2018

 சுடரொளியில் இணைந்த பல ஊடகவியலாளர்கள் நடுத்தெருவுக்கு வந்திருப்பதாக சொல்லப்படுகின்றது.