பொய்யான தகவல்களை பரப்பும் நபர்களை கைது செய்ய நடவடிக்கை!

வெள்ளி சனவரி 11, 2019

சமூக வலைத்தள ஊடகங்களில் பொய்யான தகவல்களை பரப்பும் கணக்குகளை வைத்திருக்கும் நபர்களை கைது செய்ய தேவையான சட்டங்களை உருவாக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் நாடாளுமன்றத்தில் நேற்று கோரிக்கை விடுத்துள்ளார்.

சமூக வலைத்தளஙக்ளில் பொய்யான தகவல்களை பரப்புவது தற்போது அதிகரித்துள்ளது. அத்துடன் அடிப்படைவாதம் மற்றும் இனவாதத்தை பரப்பும் நடவடிக்கைகளும் சமூக வலைத்தளங்கள் ஊடாக மேற்கொள்ளப்படுகிறது.

இவற்றுக்கு எதிராக சட்டத்தை இயற்றி குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றேன் என எஸ்.எம்.மரிக்கார் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்த டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் அஜித் பீ. பெரேரா, இணையத்தளங்கள் ஊடாக பொய்யான தகவல்களை பரப்பும் நபர்களை கைது செய்ய முடியும்.

அதற்கு தேவையான சட்டத்தை உருவாக்க எதிர்பார்த்துள்ளதாகவும் கூறியுள்ளார்.