பொருண்மியத்தினை மேம்படுத்தும் ரவிகரன்!

திங்கள் மே 21, 2018

அன்றாட பொருண்மியத்தினை மேம்படுத்தும் நோக்கோடு 12 குடும்பங்களுக்கு வடமாகாணசபை உறுப்பினர்  துரைராசா ரவிகரன் அவர்களால் கோழிக் குஞ்சுகள் வழங்கப்பட்டன.

இது தொடர்பில் மேலும் அறியவருகையில்,

ரவிகரன் அவர்களுடைய 2018ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டிலிருந்தே குறித்த கோழிக் குஞ்சுகள் வழங்கப்பட்டன. மேலும் அன்றாட பொருண்மியத்திற்கு இடர்படும் 12 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு, உரூபாய் 80000 பெறுமதியில் இவ்வுதவிகள் வழங்கப்பட்டன.

கடந்த 16.05.2018(புதன்கிழமை) அன்று முல்லைத்தீவு மாவட்ட கால்நடை மருத்துவமனையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வடமாகாணசபை உறுப்பினர்  துரைராசா ரவிகரன் அவர்கள் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட கால்நடை அபிவிருத்தி உத்தியோகத்தர்  .வே.இரத்தினசபாபதி அவர்கள், கால்நடை மருத்துவர் திருமதி.தில்லைநாதன் நிகேதினி, கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர்  சின்னராசா லோகேசுவரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும் பயனாளிகள் கலந்துகொண்டு ரவிகரன் அவர்களிடமிருந்து கோழிக்குஞ்சுகளைப் பெற்றுக்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.