பொறுப்பதற்கும் ஓர் எல்லையுண்டு!

யூலை 17, 2017

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை அரசாங்கம் பிற்போட்டு வருகின்ற நிலையில், இவற்றை பொறுத்துக் கொள்வதற்கும் ஒரு எல்லையுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். 

இன்று (17) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.  அண்மையில் பிரதமர் தலைமையில் அலரிமாளிகையில் இடம்பெற்ற கட்சித் தலைவர்களுடனான சந்திப்பில், ஒன்றிணைந்த எதிர்கட்சி மற்றும் தான் உள்ளிட்டோர் கலந்து கொள்ளவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். 

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை பிற்போடும் நோக்கில் இந்த சந்திப்பு நடைபெற்றதே இதற்குக் காரணம் எனவும் வாசுதேவ நாணயக்கார கூறியுள்ளார். அத்துடன், தேர்தல் நடைபெறாமையால் உள்ளூராட்சி நிறுவனங்கள் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், வரும்காலத்தில் அரசாங்கத்திற்கு பாரிய அழுத்தங்களை கொடுக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் இதன்போது மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். 

செய்திகள்
சனி யூலை 21, 2018

சிங்களவர்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையில் பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் சர்வதேச சக்திகள் செயற்பட்டு வருகின்றன.