பொலித்தீன் கொண்டுசெல்லத் தடை!

January 11, 2017

எதிர்வரும் திங்கட்கிழமையிலிருந்து யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்குள் பொலித்தீன் கொண்டுசெல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.

சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவின் அறிவுறுத்தலுக்கமைய இத்தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளதாக வைத்தியசாலை நிர்வாகத்தினால் இன்று ( 11 ) வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களால் பொலித்தீன் பாவனையைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்று சமூகத்தில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் பாவனை பொதுவான விடயமாக மாறியுள்ளதால், இவை சுற்றுச்சூழலுக்கும், மக்களுக்கும் நேரடியாகவும், மறைமுகமாகவும் தீங்கு விளைவிக்கின்றன.

குறிப்பாக, குளோரினேட்டட் பிளாஸ்டீக்   மற்றும் பொலித்தீன் எரியும் போது வெளியாகும் டயொக்சீன் வாயுவை சுவாசித்தல் மற்றும் சில பொலித்தீன் பைகளில் உள்ள இரசாயனப் பொருள் உணவுகளில் கசிவடைவதால் பல சுகாதார பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

அதாவது புற்றுநோய், பிறப்பு குறைபாடுகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவு, நாளமில்லா சுரப்பிகளின் சீர்குலைவு, ஏற்படும். மேலும் வளர்ச்சி மற்றும் மீளுருவாக்கம் ஆகியவற்றில் தாக்கங்கள் ஏற்பட்டு நோய்வாய்ப்பட நேரிடும்” எனவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகள்
வெள்ளி June 23, 2017

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை வழங்கிய உறுதிமொழிக்கு அமைய, காணாமற்போனோர் தொடர்பில் ஆராய்வதற்கான அலுவலகத்தை அமைக்கும் பொறிமுறை இடம்பெறுகிறது.

வெள்ளி June 23, 2017

இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெற்ற அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் கலந்துரையாடலின் போது மோதல் ஏற்பட்டுள்ளது.

வைத்தியர் ஒருவரை மற்றுமொரு வைத்தியர் தாக்கியபோதே இந்த மோதல் ஏற்பட்டுள்ளது.

வெள்ளி June 23, 2017

அவுஸ்திரேலியா அரசாங்கத்தினால் நிர்வகிக்கப்படும் பப்புவா நியூகினியவின் மானஸ் மற்றும் நவுறுதீவு முகாம்களில் உள்ள இலங்கையர்களை அமெரிக்காவில் குடியமர்த்தும் திட்டம் இறுதி நிலையை அடைந்துள்ளது.

வெள்ளி June 23, 2017

கண்ணி வெடிகளின் தாக்கங்களற்ற முதலாவது மாவட்டமாக மட்டக்களப்பை உருவாக்க வேண்டும் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கேஷாப் தெரிவித்துள்ளார்.