போராட்டம் கைவிடப்பட்டுள்ளது!

Wednesday May 16, 2018

தனியார் பேருந்து  உரிமையாளர்கள் சங்கத்தினரால், நாடுமுழுவதிலும் இன்று நள்ளிரவு முதல் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த வேலை நிறுத்தப் போராட்டமானது கைவிடப்பட்டுள்ளது.

போக்குவரத்துத் துறை அமைச்சர், நிமால் சிறிபாலடி சில்வாவுடன் தனியார் பேருந்து  உரிமையாளர்கள் சங்கத்தினர் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளின் பின்னர் மேற்படி தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 22 ஆம் திகதியிலிருந்து, பஸ் கட்டணங்களை 12.5 சதவீதத்தாலும், 10 ரூபாயாக காணப்பட்ட குறைந்த பஸ் கட்டணம் 12 ரூபாயாக அதிகரிக்கவும் அரசாங்கம் இணங்கியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.