போராட்டம் மேற்கொண்டுள்ள மாற்று திறனாளிகளை திருமாவளவன் சந்திப்பு!

புதன் ஓகஸ்ட் 05, 2015

ஆகத்து 4, சென்னை பத்திரிக்கையாளர்கள் சங்கம் முன்பு நள்ளிரவு 11 மணி முதல் 12.30 வரை மழையில் நனைந்தவாறே மது ஒழிப்பு கொள்கைக்காக உண்ணா நிலை அறப்போரட்டத்தில் ஈடுபட்டு வரும் மாற்றுத் திறனாளிகளை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின்  தலைவர் தொல் திருமாவளவன் அவர்கள் சந்தித்து உரையாடினார்.

அவருடன் வந்திருந்த சேலம் ஜெயச்சந்திரன் ,அப்துல்ரகுமான் ஆகியோர்  மழையில் நனைந்து   தரையில் அமர்ந்திருந்த அவர்களுக்கு  நள்ளிரவு வேளையில்   சுமார் 50 நாற்காலிகளை ஏற்பாடு செய்தனர்.