போலி நாணயத்தாள்களை அச்சிட்ட இருவர் கைது

January 12, 2017

மாத்தறை பகுதியில் போலி நாணயத்தாள்களை அச்சிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், போலி நாணயத்தாள்களை அச்சிட்ட இடமும் பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட நபர்கள் 5000 போலி நாணயத் தாளுடன் கடையொன்றில் பொருட்களை கொள்வனவு செய்ய முயன்ற போது, கடை உரிமையாளருக்கு ஏற்பட்ட சந்தேகத்தில் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

இதன் பொது குறித்த நபர்களிடம் இருக்கும் பணம் போலியானது என தெரியவந்துள்ளதுடான்,போலி நாணயத்தாள்களை அச்சிட பயன்படுத்திய அனைத்து உபகரணங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

செய்திகள்
வியாழன் December 14, 2017

பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிரான வழக்கை மீண்டும் எதிர்வரும் ஜனவரி 22ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.