போலி பரீட்சார்த்தி சிக்கினார்!

வியாழன் டிசம்பர் 06, 2018

முல்லைத்தீவு - துணுக்காய் பகுதியில் 2018 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைக்கு  தோற்றிய பரீட்சாத்திக்கு பதிலாக வேறொரு நபர் பரீட்சை எழுதி சிக்கியுள்ளார்.  

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை  3 ஆம் திகதி  ஆரம்பமானது இதில்  6 இலட்சத்து 56,000 பரீட்சாத்திகள் தோற்றியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

2018 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய பரீட்சாத்திக்கு பதிலாக போலியான நபரை பொலிஸார் கைது செய்ததாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஜெனரல் பீ.சனத் பூஜித தெரிவித்தார்.

தமிழ் மொழி மற்றும் இலக்கிய பாடத்திற்கு பரீட்சார்த்திக்கு பதிலாக போலியான பரீட்சார்த்தி சமுகமளித்துள்ளார்.

இது வரைக்கும் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் 10 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

குறித்த முறைப்பாடு சம்பந்தமாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.