மகனின் விடுதலைக்காக தந்தை போர்க்களத்தில்

ஒக்டோபர் 13, 2017

அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருந்துவரும் தமிழ் அரசியல் கைதி திருவருளின் தந்தை இராசதுரை இன்று வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டார். 

நடக்க முடியாத நிலையிலும் தனது கைத்தடி சகிதம் போராட்டத்திற்கு வந்த அவர் தனது மகனின் விடுதலையை வலியுறுத்தி ஏ-9 நெடுஞ்சாலையில் அமர்ந்திருந்து போராடினார். இவரோடு அவரது உறவினர்களும் இப்போராட்டத்தில் கலந்துகொண்டனர். 

இதேபோன்று, மதியரசன் சுலக்சனின் உறவினர்களும் இப்போராட்டத்தில் கலந்துகொண்டனர். 

இவர்கள் கண்களில் கண்ணீரோடு காணப்பட்டனர். தமது பிள்ளைகளின் கோரிக்கைகளை நிறைவேற்றி, அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். 

இணைப்பு: 
செய்திகள்