மகளிர் கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்ப தனி கவனம் செலுத்த வேண்டும்

ஒக்டோபர் 12, 2017

மகளிர் கிரிக்கெட் போட்டிகளை தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பு செய்வதன் மூலம் மக்களிடையே அது குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தலாம் என மிதாலி ராஜ் கூறினார்.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் அளித்த பேட்டி வருமாறு:-

மகளிர் கிரிக்கெட்டிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். தொலைக்காட்சியில் போட்டிகளை அடிக்கடி ஒளிப்பரப்பு செய்வதன் மூலம் மக்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தும். மக்கள் நேரடி ஒளிபரப்பை பார்த்ததை விட அதிக மக்கள் அதன் மறு ஒளிப்பரப்பை பார்த்துள்ளனர்.

நாங்கள் இன்னும் அதிக போட்டிகளில் விளையாட வேண்டும் என நினைக்கிறோம். அது டி20 மற்றும் ஒருநாள் போட்டியாக இருந்தாலும் சரி. உலகக் கோப்பை போட்டிக்கு பிறகு எங்கள் அணி தயாராக உள்ளது. அது குறித்து ஐசிசி சற்று ஆலோசனை செய்ய வேண்டும். 

போட்டிகள் குறித்த விழிப்புணர்வு மற்றும் விளம்பரத்தை அதிகப்படுத்த வேண்டும். மக்கள் மைதானத்திற்கு நேரில் வந்து விளையாட்டை பார்க்க வேண்டும். ஆனால், அவ்வாறு நடப்பதில்லை.  மேலும், பள்ளியில் படிக்கும் பெண் குழந்தைகளிடம், விளையாட்டில் சேர்ந்து சாதிக்க நாங்கள் ஊக்குவித்து வருகிறோம்.

செய்திகள்
ஞாயிறு ஒக்டோபர் 22, 2017

குர்திஸ்தானின் கேர்க்குக், ரஸ் குர்மாற்றூ ஆகிய நகரங்களில் ஈராக்கிய-ஈரானிய படைகளால் 550 தொடக்கம் 600 வரையான குர்தி மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

சனி ஒக்டோபர் 21, 2017

குர்திஸ்தானில் கடந்த ஆறு நாட்களாக ஈரானிய-ஈராக்கிய படைகள் முன்னெடுத்து வரும் படை நடவடிக்கைகளில் 168,372 குர்தி மக்கள் இடம்பெயர்ந்திருப்பதாக குர்திஸ்தான் மாநில அரசாங்கம் அறிவித்துள்ளது.

சனி ஒக்டோபர் 21, 2017

மர்ம நபரால் கடத்தப்பட்ட பாகிஸ்தான் பெண் பத்திரிக்கையாளர் இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர்  

சனி ஒக்டோபர் 21, 2017

குர்திஸ்தான் தலைநகர் எர்பில் நோக்கி ஈரானிய துணைப்படைகளின் உதவியுடன், கவச ஊர்திகள் சகிதம் வெள்ளிக்கிழமை ஈராக்கிய படைகள் முன்னெடுத்த வலிந்த படையெடுப்பு முறியடிக்கப்பட்டிருப்பதாக குர்திஸ்தான் மாநில பா

வெள்ளி ஒக்டோபர் 20, 2017

வடகொரியாவுக்குப் போர் மிரட்டல் விடுப்பது அமெரிக்காவுக்குத் தான் பேராபத்து என்று ஹிலாரி கிளின்டன் தெரிவித்துள்ளார்.வடகொரியா அமெரிக்காவை குறிவைத்து அவ்வப்போது அணு ஆயுதம் மற்றும் ஏவுகணைச் சோதனையைநடத்த

வெள்ளி ஒக்டோபர் 20, 2017

நியூசிலாந்தின் புதிய பிரதமராக தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த ஜெசிந்தா அர்டென் பதவியேற்க உள்ளார். மிகக்குறைந்த வயது பெண் பிரதமர் என்ற பெருமையைப் பெறும் ஜெசிந்தாவுக்கு வயது 37.