மகளுக்கு ஆசிபா என பெயரிட்ட கேரள பத்திரிகையாளர்!

April 15, 2018

காஷ்மீரில் கொல்லப்பட்ட சிறுமியின் பெயரை வைத்த கேரள பத்திரிக்கையாளர் கோழிக்கோடு: காஷ்மீர் சம்பவத்தில் கொடூரமாக கொல்லப்பட்டு இறந்த சிறுமியின் நினைவாக மனிதாபிமான அடிப்படையில் தனது மகளுக்கு ஆசிபா என கேரள பத்திரிகையாளர் ரஜீத் ராம் என்பவர் பெயரிட்டுள்ளார். 

காஷ்மீரில் கத்துவா மாவட்டத்தில் 8 வயது சிறுமி 7 பேர் கொண்ட கும்பலால் சீரழிக்கப்பட்டார். கிட்டதட்ட 7 நாட்கள் அந்த சிறுமியை அடைத்து வைத்திருந்து மயக்க மருந்து செலுத்தி சீரழித்துள்ளனர். பின்னர் அவரை கடந்த ஜனவரி 17-ஆம் திகதி கொலை செய்துவிட்டனர்.

 இந்த உண்மை 3 மாதங்கள் கழித்து வெளியாகியுள்ளது. இந்த கொடூர சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாகியது. இதனிடையே கேரளத்தை சேர்ந்த பத்திரிகையாளர் ரஜீத் ராம். இவருக்கு கடந்த பிப்ரவரி 4-ஆம் தேதி பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று யோசனை செய்துக் கொண்டிருந்தார்.

இந்த நிலையில் காஷ்மீரில் சிறுமி விவகாரம் வெளியே வரத் தொடங்கியது. இந்த சம்பவத்தால் ரஜீத் ராம் மனமுடைந்தார். இதையடுத்து மனைவியுடன் கலந்தாலோசனை செய்துவிட்டு மகளுக்கு ஆசிபா என பெயர் சூட்டினார்.

இதுகுறித்து ரஜீத் ராம் கூறுகையில், கத்துவாவில் 8 வயதான குழந்தை கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் எனது மூத்த மகளுக்கு 7 வயதாகிறது. மதம், ஜாதி கடந்த அனைவரிடமும் நட்பு பாராட்ட வேண்டும் என்பதற்காக எனது இளைய மகளுக்கு ஆசிபா என பெயரிட்டேன். ஜாதி, மதம் கடந்த முடிவு இதுவாகும் என்றார் ரஜீத் ராம்.

 

செய்திகள்
சனி செப்டம்பர் 15, 2018

பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களின் விடுதலை விவகாரத்தில் அரசியலமைப்பின் சட்டப்படி நியாயமான முறையில் உரிய முடிவு எடுக்கப்படும் என ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.