மகாத்மா உருவம் பொறித்த 4 அஞ்சல் தலை விலை ரூ.4 கோடி

April 21, 2017

லண்டனில் மகாத்மா உருவம் பொறித்த 4 அஞ்சல் தலைகள், 5 லட்சம் பவுண்டுகளுக்கு (சுமார் ரூ.4 கோடியே 15 லட்சம்) ஏலத்தில் விடப்பட்டுள்ளன.   மகாத்மா காந்தியின் உருவப்படம் பொறித்து, 1948-ம் ஆண்டு இந்தியாவில் வெளியிடப்பட்ட ரூ.10 முக மதிப்பிலான அஞ்சல் தலைகள் மிகவும் அரிதானவை. அவற்றில் 13 அஞ்சல் தலைகள் மட்டுமே புழக்கத்தில் உள்ளன.

இந்த 13 அஞ்சல் தலைகள் வெளியீட்டுத்தாளில் இருந்து, கவர்னர் ஜெனரல் செயலகத்துக்கு வழங்கப்பட்டதாகும். இவைதான் அதிகாரப்பூர்வமானதாகும். அவற்றில் 4 அஞ்சல் தலைகள், இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் ராயல் தபால் தலை சேகரிப்பு தொகுப்பில் உள்ளன. இந்த தொகுப்புதான் உலகின் மிகப்பெரிய அஞ்சல் தலை தொகுப்பு என கருதப்படுகிறது.

மீதி 9 அஞ்சல் தலைகளில் 4 அஞ்சல் தலைகள் ஒரே தாளாக சேர்ந்து உள்ளவை. இந்த 4 அஞ்சல் தலைகள் லண்டனில் ஸ்டான்லி கிப்பன்ஸ் என்ற வர்த்தகரால் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இவற்றை அவுஸ்ரேலியாவை சேர்ந்த தனியார் அஞ்சல் தலை சேகரிப்பாளர் ஒருவர் ஏலத்தில் வாங்கி உள்ளார். அவரது பெயர் விவரம் வெளியிடப்படவில்லை. இந்த 4 அஞ்சல் தலைகள், 5 லட்சம் பவுண்டுகளுக்கு (சுமார் ரூ.4 கோடியே 15 லட்சம்) ஏலத்தில் விடப்பட்டுள்ளன. இந்திய அஞ்சல் தலைகள் இந்த அளவுக்கு அதிக விலைக்கு விற்பனை ஆகி இருப்பது இதுவே முதல் முறை. 

செய்திகள்
புதன் April 26, 2017

வட கொரியா முன்னெடுத்த ஏவுகணை பரிசோதனைகள் மற்றும் அண்மையில் அந்நாடு எழுப்பிய கருத்துக்களால் முறுகல் நிலை தோன்றியுள்ள நிலையில், அமெரிக்காவின் முன்னணி நீர்முழ்கி மற்றும் போர்க்கப்பல்கள் போர் ஒத்திகைக்

ஞாயிறு April 23, 2017

புதிய அதிபரை தேர்ந்தெடுக்கும் அதிபர் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.