மகிந்த சிறைச்சாலைக்குப் பயணம்!

January 11, 2017

நேற்றையதினம்(10) சிறையிலடைக்கப்பட்ட முன்னாள் அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவைச் சந்திக்க சிறீலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷ சிறைச்சாலைக்குப் பயணம் செய்துள்ளார். 

இவர் நேற்றையதினம் மாலை சிறைச்சாலைக்குப் பயணத்தை மேற்கொண்டுள்ளார். கடந்த ஆட்சிக்காலத்தில், விமல் வீரவன்ச வீடமைப்புத் துறை அமைச்சராக இருந்தபோது, அரச வாகனத்தை முறைகேடாகப் பயன்படுத்தியமை தொடர்பாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய நேற்றைய தினம் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு விசாரணைக்கு அழைக்கப்பட்ட இவர் அங்கு வாக்குமூலம் பெற்றுக்கொண்டதன்பின்னர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதனைத்தொடர்ந்து அவரை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோது, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

செய்திகள்