மகிந்த தரப்பினர் தனியான அணியாக செயற்பட முடியாது

Wednesday February 24, 2016

தமது அணியை தனியான அரசியல் அணியாக நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கவேண்டும் என்று மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான அணியினர் விடுத்தவேண்டுகோளை சபாநாயகர் இன்று நிராகரித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன நாடாளுமன்ற நிலையியல் கட்டளையின்படி தமது கூட்டு எதிர்க்கட்சியை தனியான அணியாக அங்கீகரிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

எனினும் இதனை மறுத்த கரு ஜெயசூரிய ஏற்கனவே நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் அணியின் ஒரு குழுவை தனியான அணியாக அங்கீகரிக்கமுடியாது என்று குறிப்பிட்டார்.

எனவே கூட்டு எதிர்க்கட்சியினர் இந்த விடயத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் பேசி தீர்த்துக்கொள்ளவேண்டும் என்று அவர் ஆலோசனை வழங்கினார்.