மகிந்த ராஜபக்ச அதிகாரத்திற்கு வந்திருப்பது ஈழத் தமிழர்களுக்கு எதிரானது

Sunday October 28, 2018

சிறீலங்கா பிரதமராக மீண்டும் மகிந்த ராஜபக்ச அதிகாரத்திற்கு வந்திருப்பது ஈழத் தமிழர்களுக்கு எதிரானது என்பது மட்டுமல்ல, இந்திய அரசுக்கும் எதிரானது என தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

இலங்கை பிரச்சனையில் சீனா மீண்டும் வெற்றி பெற்றுவிட்டதாகவும் இந்தியாவின் அணுகுமுறை தோல்வியை சந்தித்துள்ளதாகவும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.