மகி நூடுல்ஸூக்கு மீண்டும் சிக்கல்!

Monday December 04, 2017

மகி நூடுல்ஸில் சாம்பல் கலக்கப்படுவதில்லை என நெஸ்லே நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. மகி நூடுல்ஸ் ஆய்வகப் பரிசோதனையில் அனுமதிக்கப்பட்டதை விட அதிக அளவிலான சாம்பல் இருப்பதாகக் கூறி உத்திரபிரதேசத்தில் உள்ள ஷாஜஹான்பூர் மாவட்ட நிர்வாகம் நெஸ்லே நிறுவனத்திற்கும் அதன் விநியோகஸ்தருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.

இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய நெஸ்லே இந்தியாவின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான சுரேஷ் நாராயணன், இந்தியாவின் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் தற்போதைய விதிமுறைகளுக்கு உட்பட்டே மகி நூடுல்ஸ் தயாரிக்கப்படுவதாகவும், அதில் சாம்பல் கலக்கப்படுவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

அளவுக்கு அதிகமாக காரீயம் கலக்கப்படுவதாக தடை விதிக்கப்பட்டதால் கடந்த ஜுன் மாதத்தில் மகி நூடுல்ஸ் சந்தையிலிருந்து திரும்பப் பெறப்பட்டு தடை விலக்கப்பட்ட பின்னர் மீண்டும் நவம்பரில் விற்பனைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது