மட்டக்களப்பில்அன்னை பூபதிக்கு வீரவணக்கம்!

Thursday April 19, 2018

தேசத்தின் விடுதலைக்காக உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த அன்னை பூபதியின் 30 ஆம் ஆண்டு நினைவு தினம் பாதுகாப்புக்கு மத்தியில் இன்று கடைப்பிடிக்கப்பட்டது. 

மட்டக்களப்பு அன்னை  பூபதியின் பிள்ளைகளின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வில் அன்னையின் திருவுருவப் படத்துக்கு மலர்மாலை அணிவித்து பொதுச்சுடர் ஏற்றினர். 

இந்த நிகழ்வில் அன்னையின் உறவினர்கள், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மட்டு இணைப்பாளர் த.சுரேஸ், மட்டு மாநகரசபை மேயர் சரவணபவன், ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டு மாவட்ட இணைப்பாளர் வே.மகேஸ்வரன், அரசியல் கட்சியினர், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.