மணிரத்னம் எப்போதும் என்னை கட்டாயப்படுத்த மாட்டார்!

April 05, 2017

மணிரத்னம் தன்னை எப்போதும் கட்டாயப்படுத்த மாட்டார் என்று ஏ.ஆர்.ரகுமான் கூறியுள்ளார்.தமிழ் சினிமாவில் தொடர்ந்து 25 வருடங்களாக இயக்குனர் மணிரத்னமும், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானும் இணை பிரியாமல் ஒன்றாக பயணித்து வருகிறார்கள். இவர்கள் கூட்டணியில் தற்போது உருவாகியிருக்கும் ‘காற்று வெளியிடை’ படம் வருகிற ஏப்ரல் 7-ந் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், மணிரத்னம்-ஏ.ஆர்.ரகுமானின் 25 வருட பயண அனுபவம் குறித்து ஏ.ஆர்.ரகுமான் மனம் திறந்து பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, அந்த காலக்கட்டத்தில் இயக்குநர் மணியின் படங்களை ​அதிகமாக பார்ப்பேன். முதன்முதலில் அவருக்காக இசையமைக்கும்போது என்னை நானே பல கேள்வி கேட்டுகொண்டேன். எந்த லெவலுக்கு வேலை செய்யவேண்டும். ஒரு ரசிகனாக அவரின் படத்திற்கு எவ்வாறு இசையமைக்கலாம் என எண்ணினேன். அவரும் அவரின் விருப்பதை தெரிவிப்பார்.

எங்களுடைய கூட்டணியில் நிறைய லவ் ஸ்டோரி படங்கள்தான் அமைந்துள்ளது. அதற்கு மூன்று விஷயம் முக்கியம். நேரம், பணம், தரம். இது அனைத்தும் எங்களுக்கு கிடைத்தது. இதுவே நான் காரணம் என நினைக்கிறன். மேலும் ஒரு கட்டாயம் இருக்காது. 5 நாட்களில் பாடல் வேண்டும் என்று கூறமாட்டார். இலக்கை எவ்வாறு அடையலாம் என்ற எண்ணம் மட்டும்தான் இருக்கும். மணி அவர்கள் என்னிடம் ‘ரோஜா’ படத்திற்கு முன்பு சந்திக்கும்போது நீங்கள் ராஜாவுடன் இசையமை​த்தீர்கள். உங்களிடம் தரமான இசை உள்ளது என கூறினார். அப்போது நான் எப்படி இசைபோடலாம் என தீவிரமாக யோசிக்க தொடங்கினேன். பிறகு 5 வருடம் கழித்து வாழ்கையில் மாற்றம் ஏற்படுவதை உணரமுடிந்தது.

காற்று வெளியிடை படம் மூலம் நாங்கள் மீண்டும் எங்களது பெஸ்டை கொடுத்துள்ளோம். இனி மக்கள் தான் படத்தை பற்றிய கருத்தை முடிவு செய்ய வேண்டும். எங்களுக்குள் தனிபட்ட விதத்தில் எந்த போட்டியும் பொறாமையும் கிடையாது. இசை என்பது ஒரு கலை. ஒரு சில படங்களில் பாடல் தான் படத்தை முடிவு செய்யும். ​அதனால்தான் நாங்கள்​ அதற்கான​ முயற்சி செய்கிறோம் என்றார்.

பல இசையமைப்பாளர்கள் தற்போது நடிப்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள். உங்களுக்கு அந்த எண்ணம் இருக்கிறதா? என்று கேட்டதற்கு மெல்லிய குரலில் வயசாகிறது என்று சிரித்துக்கொண்டே விடைபெற்றார்.  

செய்திகள்
ஞாயிறு April 08, 2018

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான கணேஸ் வெங்கட்ராமன் மற்றும் அவரது மனைவி நிஷா ஆகியோர் நேற்று யாழ்ப்பாணம் வந்துள்ளனர்.