மணிரத்னம் படத்தில் புதிய அவதாரம் எடுக்கும் ஜோதிகா!

வியாழன் ஏப்ரல் 05, 2018

மணிரத்னம் இயக்கத்தில் `செக்கச் சிவந்த வானம்' பிரமாண்ட கூட்டணியுடன் உருவாகி வரும் நிலையில், இந்த படத்தில் ஜோதிகாவின் கதாபாத்திரம் என்ன என்பது குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. 

`காற்று வெளியிடை' படத்தை தொடர்ந்து மணிரத்னம் அடுத்ததாக பல முன்னணி நட்சத்திரங்களை வைத்து `செக்க சிவந்த வானம்' படத்தை இயக்கி வருகிறார். 

மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் அரவிந்த்சாமி அரசியல் வாதியாகவும், சிம்பு என்ஜினீயராகவும், விஜய்சேதுபதி இன்ஸ்பெக்டராகவும் நடிக்கிறார்கள். அருண் விஜய் வில்லனாக வருகிறார். ஜோதிகா இதில் ஆணாதிக்கத்துக்கு எதிரான பெண்ணாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருடைய இந்த புதிய அவதாரம் பேசப்படும் என்று கூறப்படுகிறது. 

மேலும் இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ் ஹிடாரி, டயானா, பிரகாஷ்ராஜ், தியாகராஜன் மற்றும் மன்சூர் அலி கான் முக்கிய முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஏ.ஆர். ரகுமான் இசை அமைக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் தயாராகிறது.