மத்திய சிலியில் 8.3 ரிச்டர் அளவுடைய பூகம்பம் தாக்கியதைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை

வியாழன் செப்டம்பர் 17, 2015

மத்திய சிலியில் 8.3 ரிச்டர் அளவுடைய பூகம்பம் தாக்கியதைத் தொடர்ந்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையமே இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

 

எனினும் சேத விபரங்கள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. உள்ளூர் நேரப்படி பி.ப 7 மணி அளவில் இந்த பூகம்பம் ஏற்பட்டுள்ளது. முன்னதாக 7.9 ரிச்டர் என தெரிவிக்கப்பட்ட போதிலும் பின்னர் 8.3 ரிச்டர் அளவுடைய பூகம்பமே ஏற்பட்டதாக தெரிவிக்கபட்டது.