மனிதன் உடல் 400 வருடத்திற்கு உயிர் வாழக்கூடியது!

செப்டம்பர் 22, 2017

மனிதன் உடல் 400 வருடத்திற்கு உயிர் வாழக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டது என்றும், வாழ்க்கை முறையை நாம் மாற்றிக்கொண்டதன் விளைவாக வாழ்நாள் குறைவதாக யோகா குரு ராம்தேவ் கூறியுள்ளார்.

யோகா குரு ராம்தேவ் டெல்லியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது மனிதனின் உடல் 400 வருடங்கள் வாழக்கூடியது என்று கூறினார்.

மேலும் இதுகுறித்து ராம்தேவ் கூறுகையில் ‘‘400 ஆண்டுகள் வாழக்கூடிய வகையில் மனித உடல் தகுதியானது. ஆனால், அந்த உடலை நாம் நவீன கால வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கத்தால் தொந்தரவு செய்து வருகிறோம்.

நவீன கால வாழ்க்கை முறையால் நாம் உயர் இரத்த அழுத்தம், இதய நோய்கள் மற்றும் இதர நோய்களை உடலுக்குள் அழைத்துக் கொண்டு, ஆயுட்காலத்தை குறைத்துக் கொண்டு, அந்த வாழ்க்கையை வாழ்வதற்காக மருத்துவர்களையும், மருந்துகளையும் சார்ந்திருக்க வேண்டியுள்ளது’’ என்றார்.

பா.ஜ.க தலைவர் அமித்ஷா காய்கறிகள் மற்றும் சூப் சாப்பிட்டு உடல் எடையில் 35 கிலோவை குறைத்துள்ளதாகவும் தனது பேச்சில் ராம்தேவ் தெரிவித்தார். 

செய்திகள்
ஞாயிறு January 14, 2018

எல்லா திக்குகளிலும்
பொங்கல்
ஒரே மாதிரியாகவே இனிக்கிறது.