மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் திட்டம்!

Saturday September 08, 2018

விண்வெளிக்கு மூன்று மனிதர்களை அனுப்ப திட்டமிட்டுள்ள இஸ்ரோ, அதற்கு பயன்படுத்தப்பட உள்ள விண்வெளி உடை மற்றும் மாதிரி விண்கலம் போன்றவை காட்சிக்கு வைத்துள்ளது.

இஸ்ரோவுடன் இணைத்து விண்வெளிக்கு முதல் விண்வெளி வீரர்களை அனுப்பும் பணிக்குழு பற்றிய தகவல்களை பிரெஞ்சு ஸ்பேஸ் தலைவர் ஜீன் யவ்ஸ் லீ கேள், பெங்களூரு ஸ்பேஸ் எக்ஸ்போ 6-வது எடிஷன் விழாவில் அறிவித்தார்.  

இந்தியா 2022 க்கு முன்பாக மூன்று விண்வெளி வீரர்களை விண்ணுக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளது. இஸ்ரோ வின் முக்கிய நோக்கம் ரஷ்யா, அமெரிக்கா மற்றும் சீனா வை தொடர்ந்து விண்ணுக்கு மனிதர்களை அனுப்பிய சாதனை பட்டியலில் நான்காவது உலக நாடாக வேண்டும் என்பது தான்.
 
இஸ்ரோ மற்றும் சிஎன்இஎஸ் பிரெஞ்சு ஸ்பேஸ் நிறுவனம் அனைத்து துறைகளிலும்  இருக்கும் கை தேர்ந்த  வல்லுநர்களை வைத்து பணிக்குழுவை உருவாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இந்தத் திட்டத்திற்காக விண்வெளி மருத்துவம், விண்வெளி சுகாதார கண்காணிப்பு, வாழ்க்கை ஆதரவு, கதிர்வீச்சு பாதுகாப்பு, விண்வெளிக் குப்பைகள் பாதுகாப்பு மற்றும் தனிப்பட்ட சுகாதார அமைப்பு என அனைத்துத் துறைக்கும் தனிப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட வல்லுனன்ர்கள் மற்றும் விஞ்ஞானிகள் அமைக்கப்பட்டுள்ளதாகக் கேள் தெரிவித்துள்ளார்.

இஸ்ரோ, அதன் விண்வெளி வீரர்கள் மூலம் நுண்ணோக்கி மீது சோதனைகள் நடத்தத் திட்டமிட்டுள்ளது. இந்திய மற்றும் பிரெஞ்சு விண்வெளி ஆராய்ச்சி குழு காலநிலை கண்காணிப்பு, விண்வெளி ஆராய்ச்சி மற்றும் பயன்பாடு, புதிய கண்டுபிடிப்பு, புதிய விண்வெளி வாகன கண்டுபிடிப்பு போன்ற அனைத்துத் துறையிலும் ஒன்று சேர்ந்து ஆராய்ச்சி மேம்பாட்டில் ஈடுபடுமென்று விழாவில் தெரிவிக்கப்பட்டது.

பெங்களூரு ஸ்பேஸ் எக்ஸ்போவில் இஸ்ரோ உருவாக்கிய ஒரு ஸ்பேஸ் உடை காட்சிக்கு வைக்கப்பட்டது. இந்த விண்வெளி ஆரஞ்சு நிற  உடை திருவனந்தபுரத்தில் விக்ரம் சாராபாய் ஸ்பேஸ் மையத்தில் கடந்த இரு ஆண்டுகளாக   உருவாக்கப்பட்டது. இந்த உடையில் ஆக்ஸிஜன் சிலிண்டர் ஒன்றை வைக்கப்பட்டு இருக்கும். விண்வெளி வீரர் 60 நிமிடங்கள் இடைவெளியில் சுவாசிக்க அனுமதிக்கிறது.

2022 ஆம் ஆண்டில் இந்திய விண்கலத்தில் இந்திய விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அனுப்புவதற்காக இஸ்ரோ இரண்டு உடைகளை  உருவாக்கியுள்ளது. விண்வெளியில் இருந்து  வருவதற்கு உரிய கேப்சூல் மாதிரை இஸ்ரோ ஏற்கனவே மாதிரியை சோதனை செய்துள்ளது.