மனித நேய ஈருருளிப் பயணம் ஆரம்பம் ஆகின்றது!

Wednesday February 28, 2018

புருச்சல்  ஐரோப்பிய ஒன்றியத்துக்கு  முன்பாக  தமிழ் மக்களுக்கான நீதியான சர்வதேச சுயாதீன விசாரணை தேவை என்ற முதன்மை   கருத்தை முன்வைத்து நாளை (28-02-2018) மனித நேய ஈருருளிப் பயணம் ஆரம்பம் ஆகின்றது. 

புருச்சல்  ஐரோப்பிய ஒன்றியத்துக்கு  முன்பாக  தமிழ் மக்களுக்கான நீதியான சர்வதேச சுயாதீன விசாரணை தேவை என்ற முதன்மை   கருத்தை முன்வைத்து நாளை (28-02-2018) மனித நேய ஈருருளிப் பயணம் ஆரம்பம் ஆகின்றது. சர்வதேச சுயாதீன விசாரணை வலுயுறுத்தி அரசியல் சந்திப்புக்கள் இன்று ஐரோப்பிய  கமிஷன் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளின் உயரதிகாரிகளுடன்  தமிழ் மக்கள் பிரதிநிதிகள் கலந்துகொண்டு  இன்று (27-02-2018) காலை முதல் பல கலந்துரையாடல் நடைபெற்றது.

இக் கலந்துரையாடலின்    ஆரம்பத்தில் ஐரோப்பிய ஒன்றிய உயரதிகாரிகள் சிறிலங்கா  பற்றிய  தமது கருத்துக்களை முன்வைத்தார். அதைதொடர்ந்து இக் கலந்துரையாடலில் பங்கேற்றிய ஈழத்தமிழ்ப் பிரதிநிதிகள்  சிறிலங்கா அரசு  தொடர்ச்சியாக செய்து வரும் இன அழிப்பை ஆதாரங்களுடன் முன் வைத்ததோடு,  சிறிலங்கா அரசு சர்வதேச சமூகத்தை   ஏமாற்றும் வகையில்  நல்லாட்சி அரசாங்கம்  முகத்தை காட்டிக்கொண்டு இருப்பதை எடுத்துக் கூறினர். தொடர்ந்து  ஈழத்தமிழர்களின்  நிலங்கள் மீள் அளிக்கப்படாத சூழலில், ராணுவ ஆக்கிரமிப்பு தொடர்ச்சியாக பல்வேறு வடிவங்களில்  தொடர்ந்து நடைபெறுகின்றது என்பதையும்  சுட்டிக்காட்டினர். அத்துடன் செப்டம்பர் 2015 மனிதவுரிமை சபை முன்வைத்த பிரேரணையின் கூற்றுப்  படி சிறிலங்கா அரசாங்கம்  விசாரணையை முன் எடுத்துச்செல்லவில்லை என்பது வலியுறுத்தப்பட்டு இன்று சிறிலங்கா அரசாங்கம் அரசிலமைப்பு  மாற்றம் என்ற விடையத்தை  முன்வைத்து அங்கே வாழும் மக்களின், குறிப்பாக ஈழத்தமிழ் மக்களின்  நல்வாழ்வுக்குரிய செயற்பாடுகளையோ அல்லது ஐக்கிய நாடுகள் சபையின்  பிரேரணையில் சிறிலங்கா அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட  விசாரணையை கூட செய்யாமல் காலத்தை நீடித்து அதை நீர்த்துப்போக வைக்கும் சிங்கள பேரினவாத அரசின் திட்டத்தை சுட்டிக்காட்டி பேசப்பட்டது - எமது கூற்றை கேட்டு தமது குழு இந்த விடயத்தில் மிக கவனத்துடன் ஆராய்ந்து அதற்கு தம்மால் முடிந்த நடவடிக்கைகளை பாராளுமன்றத்திலும் ஐரோப்பிய கமிஷனிடமும் எடுத்துச்செல்வதாக உறுதியளித்தார். இன்றைய சந்திப்பில் ஐரோப்பிய தமிழர் ஒன்றிய தலைவர்களும் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு - பெல்ஜியம் மற்றும் தமிழ் இளையோர் அமைப்பு - பெல்ஜியம் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

நாளை ஐரோப்பிய ஒன்றியத்துக்கு  முன்பாக  தமிழ் மக்களுக்கான நீதியான சர்வதேச சுயாதீன விசாரணை தேவை என்ற முதன்மை  கருத்தை முன்வைத்து கவனயீர்ப்பு ஆர்பாட்டத்துடன் ஈருருளிப் பயணம்  ஆரம்பமாகின்ற சம நேரத்தில் ஐரோப்பிய பாராளுமன்றத்தின் தெற்காசிய  நாடுகளுக்கு பொறுப்பான பாராளுமன்ற குழு தலைவர்களுடனும் சில ஐரோப்பிய நாடுகளின் உயரதிகாரிகளுடன்  தமிழ் மக்கள் பிரதிநிதிகள் சந்திக்கவுள்ளனர். இது எம் உரிமைக்கான் குரல். எனவே நாம் கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். அனைத்து தமிழ் மக்களையும் உரிமையுடன் அழைக்கின்றோம்.

தொடர்புகளுக்கு :
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு - பெல்ஜியம் 
+32489761444