மன்னரை திருமணம் செய்து கொள்ள சென்ற 38 பெண்கள் விபத்தில் சிக்கி பலி

திங்கள் ஓகஸ்ட் 31, 2015

மன்னரை திருமணம் செய்துக்கொள்வதற்காக நடத்தப்படும் விழாவில் கலந்துக்கொள்வதற்காக சென்ற 38 பெண்கள் விபத்தில் சிக்கி பலியாகியதோடு 20 பெண்கள் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ள கோர சம்பவம் சுவாசிலாந்தில் இடம்பெற்றுள்ளது.

 

ஆபிரிகாவில் உள்ள ஒரு சிறிய நாடு சுவாசிலாந்து. அந்த நாட்டை ஆட்சி செய்பவர் மன்னர் மஸ்வாதி-III. அந்த நாட்டில் சில ஆண்டுகளுக்கு ஒருமுறை பாரம்பரிய விழா ஒன்று நடைப்பெறும். அதில் நாட்டின் அழகிய பெண்கள் கலந்துக்கொண்டு நடனம் ஆடுவார்கள். அந்த பெண்களில் ஒருவரை மன்னர் தனது புதிய மனைவியாக தேர்ந்தெடுப்பார்.

 

மன்னர் நடத்தும் விழாவில் கலந்து கொள்ள, ஒரு லொறியில் சுமார் 50க்கும் மேற்பட்ட பெண்கள் சென்ற போது, அந்த லொறியானது அம்பபான் மற்றும் மஞ்சினி நகரங்களுக்கு இடையே விபத்தில் சிக்கியது. இதில் 38 பெண்கள் பலியானார்கள். மேலும் 20 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.