மன்னாரில் 160 ஏக்கர் காணி அபகரித்து அன்னாசி பயிர்செய்கை!

August 12, 2017

மன்னார் மாவட்டத்தின் பரப்பு கடந்தான் பகுதியில் இஸ்ரேல் பிரஜை அன்னாசி பயிர்செய்கை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில்  வன ஜீவராசிகள் திணைக்களத்தினால் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த இஸ்ரேல் பிரஜை கடந்த 2014 ஆம் ஆண்டு தொடக்கம் அன்னாசி பயிர்செய்கையில் ஈடுபட்டு வருகின்றார். பரப்புக்கடந்தான் பகுதியில் 160 ஏக்கர் காடு அழிக்கப்பட்டு இஸ்ரேல் பிரஜையினால் இந்த அன்னாசி பயிர் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பிரதேச மக்கள் கருத்து தெரிவிக்கையில் மன்னார் மாவட்டத்தில் 160 ஏக்கர் காணி ஒரு வெள்ளைக்கார நிறுவனத்திற்காக அன்னாசி பயிர் செய்கைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த குறிப்பிட்ட காட்டுப்பகுதியில் பிரதேச மக்கள் விறகு மற்றும் மரங்கள் தறிக்க முடியாத நிலை காணப்படுகின்றது  இதற்கான அனுமதி யார் கொடுத்தது இந்த காட்டுப்பகுதியில் இந்தியாவிற்கு சென்ற மக்களின் காணிகளும் காணப்படுகின்றது இவையெல்லாம் அத்து மீறி பிடிக்கப்பட்டுள்ளது. என்று பிரதேச மக்கள் தெரிவித்துள்ளார்கள்.

வனஜீவராசிகள் திணைக்கழத்திற்கு சொந்தமான குறித்த காணி இலங்கையர் ஒருவர் ஊடாக இஸ்ரேல் நாட்டு பிரஜைக்கு வழங்கப்பட்டுள்ளதாக மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் எஸ்.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இதில் 100 ஏக்கர் காணி பொதுமக்களுக்கு சொந்தமான காணி இது 1989 ஆம் ஆண்டு காணி கச்சேரி ஊடாக மக்களுக்கு வழங்கப்பட்ட காணி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இணைப்பு: 
செய்திகள்
வியாழன் March 22, 2018

ரஷ்யாவின் மொஸ்கோ நகரில் இருந்து எமிரேட்ஸ் விமானம் மூலம் அமெரிக்காவின் ஹுஸ்டன் நகரை நோக்கி பயணிக்க முற்பட்ட நாமல் ராஜபக்ஷவுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கத்தில் கூறியுள