மன்னார் மாவட்டச் செயலக கட்டிடத்தை ரணில் திறந்து வைத்தார்

May 19, 2017

மன்னார் மாவட்டத்தில் இன்று    ஒரு விசேட தினமாகும்.யுத்தத்தின் போது இராணுவ வீரர்கள் மற்றும் பொது மக்கள் என பல ஆயிரக்கணக்கான உயிர்கள் இழக்கப்பட்ட ஒரு நாள் என்பதனை நாங்கள் நினைவு கூற வேண்டும்.இரு தரப்பில் இருந்தும் யுத்தத்தில் போரிட்டவர்கள்,உயிரிழந்தவர்கள். பாதிக்கப்பட்டவர்கள் வெளிநாட்டவர்கள் அல்ல.இலங்கை பிரஜைகளேஅப்பாவி பொதுமக்களே அதிகளவில் உயிரிழக்க நேர்ந்துள்ளது என பிரதமர் ரணில் விக்கிமசிங்க தெரிவித்தார்.

மன்னாரில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட மன்னார் மாவட்டச் செயலக 4  மாடிக்கட்டிடத்தொகுதியை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.

அதன் பின் உரை நிகழ்த்துகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,,,

மன்னார் மாவட்டத்தின் அபிவிருத்திகள் மற்றும் குறைபாடுகள் தொடர்பாக பாராளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவர் செல்வம் அடைக்கலநாதன்,பாராளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ் நிர்மலநாதன்,கே.கே.மஸ்தான் ஆகியோர் பாராளுமன்றத்தில் என்னை சந்திக்கின்ற போதும் தொடர்ந்தும் தொந்தரவு கொடுத்து  வருகின்றனர்.

அதே சமயம் இந்த பிரதேசத்திற்கு வருகை தருமாறு அமைச்சர் றிஸாட் பதியுதீன் வேண்டு கோள் விடுத்திருந்தார். அமைச்சர் இந்த மாவட்டத்தை முன்னேற்றுவதற்காக பல்வேறு வகையிலும் பாடுபட்டவர்.

இந்த சந்தர்ப்பத்தில் மாவட்டத்தின் ஒருங்கிணைப்பு குழுவின் கோரிக்கையடங்கிய விண்ணப்பம் எங்களுக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. அதற்கமைவாக நிதி ஒதுக்கீடுகளை மாவட்டத்திற்கு வழங்குவதற்கும்,மாகாண சபையூடாக நிதித்திட்டங்களை வழங்குவதற்கும் அவகாசத்தை நாங்கள் வழங்கியுள்ளோம்.

 யுத்தத்தினால் சேதமடைந்த மற்றும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மன்னார் மாவட்டத்தினை பல்வேறு வகையிலும் முன்னேற்றுவதற்காக மாகாண சபை,மத்தியரசு என பார்க்காது இரண்டு தரப்புக்களினூடாகவும் இணைந்து குறித்த திட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம்.

 மன்னார் மாவட்டத்தில் இன்று   ஒரு விசேட தினமாகும்  யுத்தத்தின் போது இராணுவ வீரர்கள் மற்றும் பொது மக்கள் என பல ஆயிரக்கணக்கான உயிர்கள் இழக்கப்பட்ட ஒரு நாள் என்பதனை நாங்கள் நினைவு கூற வேண்டும்.

 இரு தரப்பில் இருந்தும் யுத்தத்தில் போரிட்டவர்கள்,உயிரிழந்தவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் வெளிநாட்டவர்கள் அல்ல.இலங்கை பிரஜைகளே. அப்பாவி பொதுமக்கள் அதிகளவில் உயிரிழக்க நேர்ந்துள்ளது.

1983 ஆம் ஆண்டு தொடக்கம் பல ஆயிரக்கணக்கான மக்கள் இவ்வாறான மரண இழப்புக்களை சந்திக்க நேர்ந்துள்ளது.அவர்களுக்காக நாங்கள் நண்மையான கருமங்களில் ஈடுபடுவோம்.ஆகவே மரணித்தவர்களை நினைவு கூற வேண்டிய நாள் இன்று.

நாங்களும் அவர்களைப்பற்றி யோசிக்கின்ற போது எங்களுக்கும் ஒன்று நினைவுக்கு வருகின்றது.இந்த நாட்டில் மீண்டும் ஒரு யுத்தம் இடம் பெறக்கூடாது.

அதற்கான வழி வகைகளை நாம் மேற்கொள்ளக்கூடாது.நல்லிணக்கத்தை  ஏற்படுத்த வேண்டும்.அரசியல் ரீதியில் தீர்வு ஒன்றை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு தோண்றுகின்றது.

விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்களில் இருந்த இளைஞர் யுவதிகளுக்கு இவ்விதமான கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை.வேறு வழிகளும் அவர்களுக்கு தெரியவில்லை.

ஆகவே அவர்களையும் நாங்கள் இந்த சமூகத்தோடு இணைத்துக்கொண்டு,அவர்களை ஒரு பொதுமகனாக நாங்கள் இந்த சமூகத்தில் ஏற்றுக்கொண்டு அவர்களுக்கான கௌரவத்தை வழங்க ஒத்துழைக்க வேண்டும்.அதற்கு அவகாசத்தை எமக்க வழங்க வேண்டும்.

அதற்காக இந்தப்பிரதேசம் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும்.இந்த பிரதேசத்தில் அபிவிருத்தி பணிகளை நாங்கள் பூரணப்படுத்துவது போல யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னா ர் தம்புள்ளை போன்ற பிரதேசங்களின் பெருந்தெருக்களையும் நாங்கள் நிர்மாணிப்பதற்கான வழி வகைகளையும் மேற்கொண்டுள்ளோம்.

அதே போன்று வீடமைப்பு திட்டங்களையும் நிர்மானிப்பதற்கு நாங்கள் எதிர்பார்த்திருக்கின்றோம்.  வடக்கு பிரதேசங்களுக்கு கைத்தொழில் முன்னேற்ற நடவடிக்கைகளுக்கு விசேட சலுகைகளை வழங்க தீர்மானித்துள்ளோம்.

அதே போன்று சுற்றுலா மற்றும் மீன்பிடி துறையை விருத்தி செய்ய  தீர்மானித்துள்ளோம்.ஒரு சில மாதங்களில் சுற்றுலா துறையை விருத்தி செய்வது தொடர்பான கலந்துரையாடல்களையும் மேற்கொள்ளவுள்ளோம்.

 மேலும் யுத்தத்தினால் காணாமல் போனவர்கள் தொடர்பில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள நாங்கள் முன் வந்துள்ளோம். இந்த சந்தர்ப்பத்தில் எல்லோறினாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய யாப்பு ஒன்றை ஒழுங்கு செய்ய வேண்டும்.எல்லோறினாலும் ஏற்றுக்கொள்ளப்படவும் வேண்டும்.நான் சென்ற அதிகமான நாடுகளில் குறித்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு என்னை வழியுறுத்தினார்கள்.

 யப்பனில் பிரதமர் அவர்கள் இந்த விடையத்தை வழியுறுத்தினார்.இந்திய பிரதமர் மோடி அவர்கள் இலங்கைக்கு வந்த போது குறித்த விடயம் தொடர்பாக கலந்துரையாடினோம். ஜனாதிபதியுடனும் கலந்துரையாடப்பட்டுள்ளது. 
 வடமாகாண முதலமைச்சருடனும், எதிர்கட்சி தலைவருடனும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
 மிக விரைவாக ஒரு தீர்மானத்திற்கு வர வேண்டும் என அங்கு வலியுறுத்தப்பட்டது.

ஆகவே இவ்விடயம் தொடர்பில் ஒரு சில மாதங்களில் அடிப்படை விடயங்கள் ஆராயப்பட்டு இறுதியாக பூரண அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளோம்.

இந்த விடயத்தை நாங்கள் இழுத்தடித்துக்கொண்டு செல்ல முடியாது.இனவாதம்,மதவாதம் என்று கதைத்துக்கொண்டு இந்த பிரச்சினைகளை தீர்க்க முடியாது.இந்த நாட்டிலே பிளவை ஏற்படுத்துகின்ற விடையங்களை கலந்துரையாட முடியாது.

நாங்கள் அனைவரும் இந்த விடையத்தில் ஒருமித்து கலந்துரையாடி முடிவுகளை எடுக்க வேண்டும். மக்கள்   எங்களிடம் எதிர் பார்க்கின்றனர் நீண்ட காலம் சிறந்த நல்லிணக்கம் உள்ள சமாதானமுள்ள ஒரு தீர்வையே எதிர்பார்க்கின்றனர்.

மக்களுக்கு பொறுப்புக்கூற வேண்டிய, மக்களுக்கு தீர்வைப்பெற்றுக்கொடுக்க வேண்டிய அரசாங்கமாக ஒன்றை ஏற்படுத்த வேண்டும்.செயற்பாடு ரீதியாக பாராளுமன்றம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும்.

 இந்த நாட்டின் பெரும்பாலான மக்கள் ஜனாதிபதி அவர்களை தெரிவு செய்தமைக்கான காரணம் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வொன்றை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று.

வாக்களித்தவர்கள் மட்டுமல்ல வாக்களிக்காதவர்களும் அதனை எதிர்பார்க்கின்றனர். ஆகவே தடங்களை ஏற்படுத்தி இலுத்தடித்துக்கொண்டிருக்க முடியாது . ஜனாதிபதியும், எதிர்க்க ட்சி தலைவரும்,நானும் இவ்விடயங்கள் தொடர்பாக கலந்து ஆலோசித்திருக்கின்றோம்.

எனவே யாப்பு ஒன்றையும்,அறிக்கை ஒன்றையும் தாயரிப்பதற்கு சகல முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளோம்.அவ்வாறான நிலமை தோண்றுமாக இருந்தால் நாங்கள் இயல்பான நிலையில் எல்லா நடவடிக்கைகளையும் முன்னெடுப்போம் என்பதில் சந்தேகம் இல்லை.என தெரிவித்தார்.

செய்திகள்
வெள்ளி June 22, 2018

தழிழீழ விடுதலைப் புலிகளின் சீருடை, கொடி உள்ளிட்ட உபகரணங்களுடன்,முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் முல்லைத்தீவு-ஒட்டுச்சுட்டான் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஒருவர் தப்பிச் சென்றுள்ள