மரணத்திற்கு பிறகும் மகள் பிறந்த நாளுக்கு மலர் கொத்து அனுப்பும் தந்தை

நவம்பர் 28, 2017

அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் மாகாணத்தில் வசிக்கும் பெய்லி செல்லர்சின் தந்தை இறந்து 4 ஆண்டுகள் ஆன போதும் மகளின் பிறந்த நாளுக்கு மலர் கொத்து அனுப்பி வருகிறார்.

அமெரிக்காவின் வாஷிங்டனில் வசித்து வருகிறார் பெய்லி செல்லர்ஸ்.  இவரது தந்தை மைக்கேல் செல்லர்ஸ்  கேன்சர்  நோயால் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு மரணம் அடைந்துவிட்டார். ஆனால் கடந்த  4 வருடங்களாக பெய்லிக்கு  அவரது தந்தை  சார்பில் சரியாக பிறந்த வாழ்த்து செய்தியோடு ஒவ்வொரு வருடமும் பூங்கொத்தும் வந்து இருக்கிறது.

தற்போது 21வது பிறந்த நாள் கொண்டாடிய அந்த பெய்லிக்கு  அதேபோல் வாழ்த்து செய்தி வந்து இருக்கிறது. தற்போது வந்த அந்த வாழ்த்து செய்திதான் இறந்த அப்பாவின் கடைசி பிறந்தநாள் வாழ்த்து செய்தி என்று அந்த பூங்கொத்தில் எழுதி இருக்கிறது.

பூங்கொத்து வாழ்த்துச் செய்தியில் 'இது தான் நான் உனக்கு சொல்லும் கடைசி வாழ்த்து. இனி நீ என்னை நினைத்து அழவே கூடாது. உன்னை நான் பார்த்துக் கொண்டே இருக்கிறேன். உனக்கு தேவைப்படும் சமயங்களில் உனக்கு அருகில் நான் இருப்பேன். நான் இருக்கும் இடம் நன்றாக இருக்கிறது. விரைவில் சந்திக்கலாம்'' என்று எழுதியுள்ளார். தற்போது அதை அந்த பெண் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. தந்தை மகளின் அன்பு அனைவரின் கண்களிலும் கண்ணீரை வர வைத்தது. பெய்லி தனது கையில் அவள் தந்தை கூறியதை அவர் நியாபகமாக பச்சை குத்தி வைத்துள்ளார்.

செய்திகள்
செவ்வாய் May 15, 2018

பிரித்தானிய அரச குடும்பத்தின் அழகி பெண் மட்டுமல்லாமல் உலகின் அரச குடும்ப வாரிசுகளில் கவர்ச்சியான மொடல் அழகி என கூறப்படும் Lady Amelia Windsor-க்கு ஹரியின் திருமணத்திற்கு அழைப்பிதழ் விடுக்கவில்லை என