மரண தண்டனை கைதிகளின் விபரம் இன்று மைத்திரியிடம் கையளிப்பு!

Thursday July 12, 2018

போதைப்பொருள் குற்றச்செயல்களில், நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின் பெயர்ப் பட்டியலை இன்று சிறிலங்கா  ஜனாதிபதிக்கு வழங்க உள்ளதாக நீதியமைச்சு கூறியுள்ளது.

ஜனாதிபதி மைத்திரி  எடுத்துள்ள தீர்மதானத்திற்கு அமைவாக நீதியமைச்சினால் அந்தப் பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் வர்த்தககம் காரணமாக தண்டனை பெற்று சிறைச்சாலையில் இருந்துகொண்டு போதைப்பொருள் வர்த்கத்தில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற கையொப்பமிடுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று கூறியுள்ளார்.