மரியனா தீவுகளில் நிலநடுக்கம்

சனி ஜூலை 30, 2016

வடக்கு பசுபிக் பெருங்கடலில் பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு அருகில் உள்ள பல தீவுகள் அடங்கிய பகுதி தான் மரியனா. மொத்தம் 14 தீவுகள் அங்கு உள்ளது.  இந்நிலையில், மரியனா தீவுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 7.7 அலகாக பதிவு ஆகியுள்ளது.

அக்ரிஹன் தீவில் இருந்து சுமார் 19 மைல்கள் தூரத்திலும், 212 கிலோமீட்டர் ஆழத்திலும் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கா புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும் சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை.

நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள சேதாரம் குறித்து முதற்கட்ட செய்திகள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை. முன்னதாக பசுபிக் பெருங்கடலை ஒட்டியுள்ள பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.