மருத்துவ உலகின் மிகப்பெரிய சாதனை

திங்கள் சனவரி 18, 2016

கனடாவில் முதன்முதலாக துண்டாடப்பட்ட கையினைப் பொருத்தும் சத்திரசிகிச்சை வெற்றி கரமாக நிறைவேறியுள்ளது. இந்த சிகிச்சையானது மருத்துவ உலகின் மிகப்பெரிய சாதனையாகும்.

கனடாவில் ரொறன்ரோ நகரில் இச்சத்திரசிகிச்சை வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. இந்தச் சத்திரசிகிச்சையில் 18 வைத்தியர்கள் ஈடுபட்டிருந்தனர். இதற்குத் தலைமைதாங்கியவர் ரொறன்ரோ வெஸ்ரேன் மருத்துவமனையின் தலைவர் டொக்டர் ஸ் ரீபன் மக்கப் ஆவார்.

டொக்டர் ஸ்டீபன் மக்கப் 1999 அமெரிக்காவில் முதன்முதலாக நடைபெற்ற அறுவைச் சிகிச்சையில் பங்கேற்றவர்களுள் ஒருவராவார்.  49 வயதுடைய பெண்ணொருவருக்கு விபத்தொன்றின்போது முழங்கையிற்குக் கீழே கையானது துண்டாடப்பட்டுள்ளது. இந்தக் கையை இணைப்பதற்கு 18 வைத்தியர்களால் சுமார் 14 மணித்தி யாலங்கள் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு இந்தப் பெண்ணின் கை பொருத்தப்பட்டுள்ளது.