மறு அவதாரம் எடுக்கும் இரத்திரனியல் கழிவுகள்

செவ்வாய் ஏப்ரல் 10, 2018

உலகில் முதன்முறையாக வீணாகும் இலத்திரனியல் கழிவுகளை மதிப்பு மிக்க பொருட்களாக மாற்றும் மைக்ரோ தொழிற்சாலையை உருவாக்கி இந்திய வம்சாவளி பெண் விஞ்ஞானி சாதனை படைத்துள்ளார். 

ஆஸ்திரேலியாவை சேர்ந்த இந்திய வம்சாவளி பெண் விஞ்ஞானி வீணா சகஜ்வாலா. இவர் நியூசவுத் வேல்ஸ் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக பணி புரிகிறார்.

இவர் பயன்படாத ‘ஸ்மார்ட்போன்’, ‘லேப்டாப்’ (மடிகணினி) போன்றவற்றின் இலத்திரனியல் கழிவுகளை மதிப்பு மிக்க பொருட்களாக மாற்றும் ‘மைக்ரோ’ தொழிற்சாலையை உருவாக்கியுள்ளார்.

இது உலகில் முதன் முறையாக உருவாக்கப்பட்டுள்ள ‘மைக்ரோ’ தொழிற்சாலையாகும். எலெக்ட்ரானிக் கழிவு பொருட்களால் சுற்றுப்புற சூழல் மற்றும் நிலத்துக்கு கடும் பாதிப்புகளும், பிரச்சினைகளும் ஏற்படுகின்றன. எனவே அவற்றை பயனுள்ள பொருட்களாக, மாற்றும் முயற்சியில் வீணா ஈடுபட்டார்.

தனது தீவிர முயற்சிக்கு பிறகு அதில் வெற்றி பெற்றார். இலத்திரனியல் கழிவுகள் மூலம் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் கண்ணாடி பொருட்கள், பிளாஸ்டிக், மரச்சாமான்கள் மற்றும் பல்வேறு உபயோக பொருட்கள் தயாரிக்கப்படுகிறது.

வீணாகும் கம்ப்யூட்டர் சர்க்கியூட் போர்டுகள் 3டி பிரிண்டிங்குக்கு தேவையான ‘கிரேடு செராமிக்ஸ்’ மற்றும் பிளாஸ்டிக் நார்களாகவும் மாற்றி உபயோகப்படுத்தப்படுகிறது. இந்த தகவலை வீணா சகஜ்வாலா தெரிவித்தார். மும்பையை சேர்ந்த இவர் 1986-ம் ஆண்டு கான் பூர் ‘ஐ.ஐ.டி.’யில் ‘பி.டெக்’ என்ஜினீயரிங் படிப்பை முடித்தார்.