மற்றைய ரக்பி வீரரும் உயிரிழந்தார்!

May 15, 2018

கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மற்றைய ரக்பி வீரரும் உயிரிழந்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர். மூச்சுத் திணறல் காரணமாக கொழும்பு தனியார் வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இரு பிரித்தானிய ரக்பி வீரர்களுள் ஒருவர் நேற்றைய தினம் உயிரிழந்தார்.

இந் நிலையில் தொடர்ந்தும் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மற்றைய ரக்பி வீரரும் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.  இவ்வாறு உயிரிழந்தவர் 27 வயதுடையவர் என தெரியவருகின்றது.

குறித்த இரு பிரித்தானிய ரக்பி வீரர்களும் இலங்கையில் இடம்பெறும் போட்டியை முன்னிட்டு கொழும்பு ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

செய்திகள்
செவ்வாய் August 14, 2018

பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தரப் பாடசாலை மாணவிகளான பா.செயந்தினி, ஏ.டி.மேரி கொன்சிகா...

செவ்வாய் August 14, 2018

மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவு கோவில்குளம் பகுதியில் மரமுந்திரிகை செய்கைக்காக அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட காணிகள் விற்பனை செய்யப்படுவது தொடர்பாக மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் எவ்வித நடவடிக்