மஹிந்தானந்தவின் வழக்கு 18ம் திகதிக்கு ஒத்திவைப்பு!

June 13, 2018

கெழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க முன்னிலையில் விசாரிக்கப்படும் வழக்கை வேறொரு நீதிபதி முன்னிலையில் விசாரிக்க உத்தரவிடுமாறு கோரி நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தாக்கல் செய்துள்ள மனுவை எதிர்வரும் 18ம் திகதி விசாரணைக்கு எடுக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இந்த மனு குமுதினி விக்ரமசிங்க மற்றும் எஸ். துரைராஜா ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை சமரசமாக முடித்துக் கொள்வது சம்பந்தமாக ஆலோசிப்பதாக இரு தரப்பு சட்டத்தணிகளும் இதன்போது நீதிமன்றில் தெரிவித்துள்ளனர். 

அதன்படி இந்த வழக்கை எதிர்வரும் 18ம் திகதி விசாரணைக்கு எடுக்க தீர்மானித்த நீதிபதி, அன்றைய தினம் இந்த நடவடிக்கையின் முன்னேற்றம் குறித்து தெரிவிக்குமாறு இருதரப்பு சட்டத்தரணிகளுக்கும் உத்தரவிட்டார். 

மஹிந்தானந்த அளுத்கமகே அமைச்சராக இருந்த காலத்தில் சட்டவிரோதமாக பெறப்பட்ட 274 இலட்சம் ரூபா பணத்தைப் பயன்படுத்தி பொரள்ளை - கிங்சி வீதியில் வீடொன்றைக் கொள்வனவு செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டு, சட்டமா அதிபரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

குறித்த வழக்கை கெழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க முன்னிலையில் விசாரிக்காமல் வேறொரு நீதிபதி முன்னிலையில் விசாரிக்க உத்தரவிடுமாறு கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

செய்திகள்
திங்கள் யூலை 16, 2018

வனவள விலங்கை துன்புறுத்துவது எந்தளவு தூரம் சட்டப்படி தவறான விடயமோ அவ்வாறான விலங்குகளை கூட்டில் அடைந்து அனுமதியின்றி மக்கள் குடியிருப்பு பிரதேசத்தில் வளர்ப்பதும் தவறான விடயமே என்று தமிழ்த் தேசியக் க

திங்கள் யூலை 16, 2018

வடக்கு கிழக்கில் இருக்கின்ற இராணுவ முகாம்கள் அகற்றப்படவோ, இராணுவத்தினரின் எண்ணிக்கை குறைக்கப்படவோ எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என இராணுவத் தளபதி மகேஸ்சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

திங்கள் யூலை 16, 2018

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.