மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் குமார வெல்கம பதவி நீக்கம்

ஒக்டோபர் 13, 2017

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தொகுதி அமைப்பாளர் பதவிகளில் இருந்து இரண்டு பேர் நேற்று மாலை முதல் நீக்கப்பட்டுள்ளனர்.  அதன்படி மஹிந்தானந்த அளுத்கமகே, நாவலப்பிட்டிய தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்தும், குமார வெல்கம மத்துகம தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டதாக கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அந்த வெற்றிடங்களுக்கு புதியவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி மத்திய மாகாண சபை உறுப்பினர் எச். ஏ. ரணசிங்க நாவலப்பிட்டிய தொகுதி அமைப்பாளராகவும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமித்ர அபயவீர மத்துகம தொகுதி அமைப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். 

இதுதவிர ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மேலும் சில தொகுதி அமைப்பாளர்கள் நேற்று மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. 

செய்திகள்
திங்கள் ஒக்டோபர் 23, 2017

அம்பலன்தோட்டை - வாதுருப்பு பகுதியிலுள்ள வயல் காணியில் இருந்து குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

திங்கள் ஒக்டோபர் 23, 2017

கைதிகள் விடயத்தில் சிறிலங்கா அரசின் அசமந்தச் செயற்பாட்டுக்கு மாணவர்கள் கடும் எதிர்ப்பு...

திங்கள் ஒக்டோபர் 23, 2017

சிங்கள அரசின் காணி பறிப்பு நிகழ்வுகளில் அவர்கள் கலந்துகொள்வது ஏன்? சுரேஸ் பிறேமச்சந்திரன் கேள்வி