மஹிந்த அணி வேட்பாளர் மீது வவுனியாவில் தாக்குதல்!

January 14, 2018

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை தேர்தலில் போட்டியிடும் ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுனயின் நெளுக்குளம் வேட்பாளர் மீது நேற்று இரவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினர்  தெரிவித்தனர்.  நேற்று இரவு வவுனியா ,நெளுக்குளம் பகுதியியில் சிறு விபத்து ஒன்று இடம்பெற்றிருந்தது. அந்த விபத்தில் சிறுவனொருவன் சிறு காயத்திற்குள்ளாகியிருந்தான். அவருடன் கதைத்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனயின் நெளுக்குளம் வேட்பாளரான குகராசா மயூரன் என்பவர் மீது இருவர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

காவல் துறையினருக்கு தகவல் வழங்கியதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற நெளுக்குளம்  காவல் துறை இருவரை கைது செய்தனர். காயமடைந்தவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாக்கியவர்கள் என்ன காரணத்திற்காக தாக்கினார்களென நெளுக்குளம் காவல் துறை விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்திகள்
புதன் January 17, 2018

இன்று (17) காலை 10.00 மணியளவில் தமிழ்த்தேசிய பேரவையின் உள்ளுராட்சி மன்ற தேர்தல் விஞ்ஞாபனம் நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் நடைபெற்றது.