மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்த கருத்தானது நியாயமற்ற தவறான கூற்றாகும்!

வியாழன் ஜூன் 14, 2018

நாட்டில் இன்று இடம்பெறும் குற்றச்செயல்களுக்கு பொலிஸாரின் பலவீனமே காரணம் என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்த கருத்தானது நியாயமற்ற தவறான கூற்றாகும் என்று காவல் துறை  ஊடப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

அண்மையில் பொல்கஸ் ஓவிடவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, காவல் துறையின் பலவீனங்களே இன்று நாட்டில் இடம்பெறும் குற்றச்செயல்களுக்கான காரணம் என குறிப்பிட்டுள்ளமையானது மிகவும் தவறான கூற்றாகும்.
 
 காவல் துறையினர்  மாத்திரம் இலங்கையில் நடைபெறும் குற்றசெயல்களை கட்டுப்படுத்திட முடியாது. அரசியல்வாதிகள், பொது மக்கள் என அனைத்து தரப்பிலிருந்தும் அதற்கான ஆதரவு வழங்கப்பட வேண்டும்.

கடந்த 2013, 2014 ஆம் ஆண்டு காலப்பகுதிகளை விட தற்போது  கொலைகள், சிறுவர் துஷ்பிரயோகங்கள், கொள்ளைச் சம்பங்கள் என்பன குறைவடைந்துள்ளது. சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் கைதுசெய்து அவர்களுக்கு தண்டனையும் பெற்றுக் கொடுக்கப்படுகிறது என்றார்.