மாரியப்பன் வாழ்க்கை வரலாறு படமாகிறது!

January 02, 2017

பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்று வரலாறு படைத்த தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன் தங்கவேலுவின் வாழ்க்கை படமாகிறது.கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பிரேசிலின் ரியோ டி ஜெனீரோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றது.

இதில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு உயரம் தாண்டுதலில் 1.89 மீற்றர் உயரம் தாண்டி தங்கப் பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்தார்.
இந்நிலையில் இவரின் வாழ்க்கை சினிமா படமாக தயாராகிறது. இந்த படத்தை ஐஸ்வர்யா தனுஷ் இயக்குகிறார்.

இதற்காக அவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பே மாரியப்பனை சந்தித்து அவரது அனுபவங்களை சேகரித்து பதிவு செய்திருக்கிறார். தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் இந்த படம் உருவாகிறது.

‘மாரியப்பன்’ என்று பெயர் சூட்டப்பட்ட இந்த படத்துக்கான போஸ்டர் புத்தாண்டையொட்டி நேற்று வெளியிடப்பட்டது. பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் ஷாருக்கான் இதனை வெளியிட்டார்.

செய்திகள்
வெள்ளி நவம்பர் 10, 2017

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுமியை மீட்பதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சியும், போராட்டமுமே 'அறம்'.

திங்கள் நவம்பர் 06, 2017

கனடியத் தமிழ்ப் பெண் "ஜெசிக்கா ஜூட்" இன் எழுச்சிக் குரலில், கவிஞர் காசி ஆனந்தனின் கவிதை வரிகளில்