மாலைதீவின் ஜனாதிபதி பயணித்த இயந்திரப் படகில் வெடிப்பு

திங்கள் செப்டம்பர் 28, 2015

மாலைதீவின் ஜனாதிபதி யாமீன் அப்துல் கயூம் (Yameen Abdul Gayoom) பயணித்த இயந்திரப் படகில் வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.  எனினும் இதில் ஜனாதிபதிக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என, வௌிநாட்டு ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன. 

 

ஹஜ் பெருநாளுக்கான சவுதி அரேபியாவுக்கு சென்று திரும்பும் வேளையே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.  மேலும் இந்த விபத்தில் அப்துல் கயூமின் மனைவி உள்ளிட்ட சிலர் சிறுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக அந்த நாட்டு அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார்.