மாலை சூட்டி, திலகமிட்டு நாய்களுக்கு நன்றி!

Tuesday November 06, 2018

நேபாள நாட்டு மக்கள் இன்று தங்களது வளர்ப்பு நாய்களுக்கு மாலை சூட்டி, திலகமிட்டு நன்றி பாராட்டி தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். 

இந்தியாவின் பல பகுதிகளில் தீபாவளி பண்டிகை என்பது இருநாள், மூன்றுநாள் கொண்டாட்டமாக இருப்பதுபோல் இந்து மக்கள் அதிகமாக வாழும் நமது அண்டைநாடான நேபாளத்தில் தீபாவளியை மக்கள் ஐந்துநாள் பெருவிழாவாக கொண்டாடி மகிழ்கின்றனர்.

இந்த கொண்டாட்டத்தின் இரண்டாவதுநாள் நாய்களுக்கான பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. ’குக்குர் திஹார்’ (நாய் பண்டிகை) என்ற பெயரில் இன்று அங்கு நடைபெற்றுவரும் தீபாவளி கொண்டாட்டத்தில் தங்கள்மீது ஆயுள்வரை நன்றி பாராட்டும் வளர்ப்பு நாய்களுக்கு மக்கள் மாலை சூட்டி, திலகமிட்டு, தீப ஆராதணை காட்டி நன்றி பாராட்டி மகிழ்கின்றனர்.