மாவீரர் தின நிகழ்வுகளில் அரசியல் கட்சியாக கலந்துகொள்ள முடியாது

Saturday November 18, 2017

வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் நடைபெறவுள்ள மாவீரர் தின நிகழ்வுகளில் அரசியல் கட்சியாக கலந்துகொள்வதற்கு எவருக்கும் அனுமதி வழங்கப்பட மாட்டாது என மாவீரர் தினப் பணிக்குழு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மேற்படிக் குழு மேலும் தெரிவிக்கையில், 

வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில், மாவீரர் தின நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற ஏற்பாடாகியுள்ளன. 

இவற்றில், அரசியல் கட்சியாக நுழைந்துகொள்ள எவருக்கும் அனுமதி வழங்கப்படமாட்டாது. சாதாரண மக்களாக வரலாம். 

அவர்களின் பாதுகாப்பு உறுப்பினர்கள் கூட ஆயுதங்களுடன் இந்த இடத்துக்குள் வர அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில், ஏனைய மாவட்டங்களைச் சேர்ந்த மாவீரர்களின் வித்துடல்களும் விதைக்கப்பட்டுள்ளன. 

அவர்களின் பெற்றோர்கள், உறவினர்களை தனித்தனியாக அழைக்க முடியாத சூழ்நிலை காரணமாக, ஊடகங்கள் ஊடாக அழைப்பு விடுக்கின்றோம் எனத் தெரிவித்துள்ளனர்.