மாவீரர் நாள் அனுமதியும் மறைந்திருக்கும் மர்மங்களும்!

ஞாயிறு டிசம்பர் 04, 2016

இலங்கைத்தீவில் பௌத்த பேரினவாத ஆட்சியாளர்கள் நல்லாட்சி என்ற புதிய பெயரிலே தமிழர்களின் ஆதரவுடன் இன்று ஆட்சிபீடத்தில் அமர்ந்துள்ளனர் .இதுவரை ஆட்சில் இருந்த பேரினவாத ஆட்சியாளர்கள் தமிழின அழிப்பு நில ஆக்கிரமிப்பு என்பவற்றையே மையமாக வைத்து ஆட்சி செய்தனர் ஆனால் இன்று ஆட்சியில் இருக்கின்ற அரசாங்கத்தைப்பொறுத்தவரை அதைவிடவும் அதிகமான பொறுப்பு ஒன்று உள்ளது.

பௌத்தமயமாக்கல் நில ஆக்கிரமிப்பு இனவாதம் என்பவற்றுடன் சர்வதேசத்திடம் இருந்து தம்மையும் தமது பரிவாரங்களையும் காப்பற்றிக்கொள்ளவேண்டிய தேவை மிக அதிகமாக இன்றய அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது எனவே அதற்காக பல காய்நகர்த்தல்களை மிகவும் தந்துரோபாயமாக முன்னெடுக்கவேண்டும் ஈழத்தீவில் நடைபெற்ற அநீதிகளுக்கு ஒரு நீதியான விசாரணை வேண்டும் அது சர்வதேசத்தின் தலையீட்டுடன் அவர்களின் மேற்பார்வையுடன் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பாதிக்கப்பட்ட தமிழர்கள் குரல்கொடுத்து வருகின்றனர். அதேவேளை நாட்டை காட்டிக்கொடுக்கமாட்டோம் வெளிநாட்டவர்கள் எங்கள் பிரச்சினையில் தலையீடு செய்ய அனுமதிக்கமாட்டோம் என்று அநீதியாளர்கள்( சிங்களபேரினவாதிகள்) எக்காளமிட்டுக்கொண்டிருக்கின்றனர் எனவே மற்றய ஆட்சியாளர்களை விட இன்று ஆட்சியில் இருக்கின்ற அரசிற்கே அதிகமான பொறுப்புக்கள் உள்ளன இந்த கடுமையான சவாலினை இன்றய அரசு மிகவும் வெற்றிகரமாக முறியடித்து.

வருகின்றது என்ற செய்தியினை சாதாரண தமிழ் குடிமக்கள் அறிந்துகொள்வார்களா என்பது சந்தேகமே !

அபிவிருத்தி என்றும் நல்லிணக்கம் என்றும் மாய ஜால வார்த்தைகளினால் தமிழர்களின் கண்களைக்கட்டிப்போட்டு நடைபெற்ற மாபெரும் இன அழிப்பினை மூடி மறைத்துவிட இலங்கை அரசுடன் துணை நிற்பவர்கள் வேறு யாரும் அல்ல தமிழர்களால் தெரிவுசெய்யப்பட்ட தமிழர்களின் வாக்குகளால் பாராளுமன்றம் சென்ற தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் ஒரு சில உறுப்பினர்களே என்ற செய்தி மிகவும் வேதனைக்குரியதுதான் ஆனாலும் இதுவே உன்மையும் கூட உள்ளக விசாரணையினை ஏற்கமாட்டோம் என்று இங்கே கொக்கரித்துவிட்டு ஐநா சபையிலே உள்நாட்டு விசாரணைக்கு சாதகமாக வாக்களித்துவிட்டு வந்தவர்கள் யார் யார் என்பது இப்போது வெளிச்சத்துக்கு வருகின்றன எனவே இந்த இன அழிப்பு விசாரணையில் இருந்து இலங்கை அரசினை காப்பாற்ற பல திட்டங்களை தீட்டிக்கொடுக்கவும் இவர்களில் ஒரு சிலர் தயங்கவில்லை என்பது காலம் இனிவரும் காலங்களில் வெளிக்கொண்டுவரும்

இலங்கை அரசினைப்பொறுத்தவரை சர்வதேசத்திலே தன்னை ஒரு அகிம்சாவாதியாகவும் நடுநிலையான ஆட்சியாளராகவும் காட்டிக்கொள்ளவேண்டிய தேவை இன்று உள்ளது எனவே அது தனது பேரினவாத முகத்தினை மூடி தன் சர்வாதிகார கரங்களை மறைத்து பல மாய ஜால வித்தைகளை காட்டவேண்டும் இதற்காய் தமிழ்தலமைகள் என்று கூறிக்கொள்ளும் ஒருசிலரையும் அது தன்னோடு இணைத்து அவர்களின் ஆலோசனைப்படி ஒரு சில செயற்பாடுகளை முன்னெடுக்கின்றதுஅதில் ஒன்றுதான் இந்த வருட மாவீரர் நாளுக்காண அனுமதி இதை எத்தனை தமிழர்கள் புரிந்துகொண்டார்களோ தெரியவில்லை ஆனால் இது ஒரு கெட்டித்தனமான திட்டமிடலே என்பது மட்டும் நிதர்சனம் ஆனால் எங்களுள் ஒரு சிலர் நல்லாட்சி அரசுக்கு நன்றி என்றும் இது நல்லிணக்கத்துக்காண சமிக்கை என்றும் புகழ்பாடிக்கொண்டிருக்கின்றனர் ஆனால் இதன் பின்னே உள்ள மாபெரும் சதியினை தெளிவுபடுத்த சரியான தலைமைகள் தமிழர் தரப்பில்இன்று இல்லை என்பது வெட்க்கப்படவேண்டிய ஒன்று போர்க்குற்றட்டாட்டு என்ற ஒண்றை பூச்சாண்டியாக காட்டி சில வல்லரசு நாடுகள் இலங்கைத்தீவின் வளங்களை சூறையாடுவதை தமது நோக்கமாக கொண்டு இன அழிப்பு விசாரனை பொறுப்புக்கூறல் என்று மிரட்டிக்கொண்டிருக்கின்றனர்

மறுபக்கம் உலகத்த்மிழர்கள் நடைபெற்ற இன அழிப்புக்கு நீதியான விசாரணைவேண்டும் அழுவதற்கும் தடை விதிக்கப்பட்ட தேசத்தில் எங்கள் உறவுகள் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர் அவர்களது உணர்வுகள் மதிக்கப்படவேண்டும் என்று நாளுக்குநாள் இலங்கை அரசிற்கு பல அழுந்தங்கள் அதிகரித்துக்கொண்டிருக்கின்ற போது அவற்றை சமாளிக்கவும் ` அடுத்த காய் நகர்த்தலுக்கான ஒரு இடைவெளியை பெற்றுக்கொள்ளவுமே இந்தமுறை மாவீரர் நாள் நினைவுகூர்வதற்கு அனுமதி அளிக்கப்படிருக்கலாம் இதைவிட எமது தமிழ் தலமைகள் நிபந்தனை ஏதும் இன்றி நல்லாட்சி அரசு என்று ஆட்சிபீடம் ஏற்றி இதுவரை அந்த அரசு தமிழர்களுக்கு எதையுமே செய்யவில்லை எனவே பல விமர்சனங்களையும் குற்றச்சாட்டுகளையும் கூட்டமிப்பின் மீது மக்கள் முன்வைத்துக்கொண்டிருக்கின்ரனர் இதுவரை காலமும் அரசுடன் பேசி எதை செய்தீர்கள் என்று கேள்வி கேட்பவர்களுக்கு மாவீரர் நாள்.

அனுமதி என்ற ஒன்றை பதிலாக கூறலாம் என்பது தமிழ் தலமைகளது சிந்தனை சுருக்கமாக கூறப்போனால் இது ஒரு கூட்டுச்சதி என்றே கூறலாம் எதிர்வரும் ஐநா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் தன்மீது மேற்கொள்ளப்படப்போகும் அழுத்தங்களை இந்த மாவீரர் நாள் என்ற ஒன்றை வைத்தே சிங்களதேசம். முறியடித்துவிடும் மக்கள் சுயமாக செயற்பட அனுமதி கொடுக்கவில்லை இராணுவத்தின் தலையீடு குறைக்கப்படவில்லை மக்களின் உணர்வுகளை மதிக்கவில்லை போன்ற பல குற்றச்சாட்டுகளுக்கு பதிலடியாக இந்த மாவீரர் நாள் என்ற ஒன்றை வைத்தை சிங்களதேசம் தப்பித்துவிடும் என்வேதான் துயிலும் இல்லங்களில் எந்த ஒரு கெடுபிடிகள் தடைகள் கைதுகள் ஏதும் மேற்கொள்ளப்படவில்லை இது நல்லிணக்கத்துக்காண சமிக்கை அல்ல எமது போராட்டத்துக்கான ஒரு வேகத்தடை ஒரு விளக்கு ஏற்றி ஒருசொட்டு கண்ணீர்விடுவதால் சிங்களதேசத்திற்கு எந்த பாதிப்பும் கிடைக்கபோவதில்லை அப்படியாயின் ஏன் இதுவரைகாலமும் இதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்ற கேள்வி எழக்கூடும் அவர்களைப்பொறுத்தவரை தமிழினத்தை எப்போதும் தமது அதிகாரத்தின் கீழே வைத்திருப்பதையே கொள்கையாக கொண்டிருக்கின்றனர் எனவே அழுவதற்கும் சிரிப்பதற்கும்கூட அவர்கள் அனுமதி கொடுக்கவேண்டும் என்ற ஒரு சர்வாதிகாரப்போக்கிலே இதுவரை செயற்பட்டார்கள் இன்றும் இந்த கொள்கையில் இருந்து விடுபடவில்லை

மாறாக தம் மீது சர்வதேசத்தில் எழுந்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு சாயம்பூசும் பல யுத்திகளை இப்போது கையாண்டுகொண்டிருக்கின்றார்கள் அதில் ஒன்றுதான் இந்த மாவீரர் நாள் இதைப்புரிந்துகொள்ளாது எம்மில் சிலர் கூட்டமைப்பின் தேர்வு சரியானதே என்றும் நலாட்சி அரசின் நல்லிணக்கத்துக்கான செயற்பாடுகள் ஆரம்பம் என்றும் புகளாரமும் சூடிக்கொண்டிருக்கின்றனர் இதைவிட ஒரு சில தலமைகள் தம்மால் கொண்டுவரப்பட்டவர்கள் தமிழ்மக்களின் உணர்வுகளை நன்கு மதிக்கின்றார்கள் என்று தற்பெருமைப்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள் ஆனால் உன்மையில் தமிழர்களின் உணர்வுகளை இன்றைய அரசு மதிக்கின்றதாக இருந்தால் அது முதலில் பயங்கரவாததடைச்சட்டத்தினை நீக்கியிருக்கவேண்டும் அரசியல் கைதிகள் நிபந்தனை அடிப்படையிலாவது விடுதலை செய்யப்பட்டிருக்கவேண்டும் ஆனால் இவற்றையெல்லாம் செய்ய தயாராக இல்லாத பேரினவாத அரசு மாவீரர் நாளுக்கான அனுமதியினை கொடுப்பதால் எவ்வாறு நல்லிணக்கம் ஏற்படும் இதனால் தமிழர்களுக்கு என்ன பயன் மாவீரர் நாள் அனுஸ்டிக்கவேண்டும் என்பதற்காகவா எம் மாவீரர்கள் இத்தகைய தியாகங்ளை செய்தார்கள்?இவற்றையெல்லாம் சிந்திக்க தமிழர் தரப்பு தவறிவிட்டதா?

மாவீரர் நாள் என்பது உன்மையிலே மகத்தான ஒரு நாள் ஈழத்தமிழினத்தின் தீபத்திருநாள் அதை நினைவுகூரவேண்டியது ஒவ்வெரு தமிழனுக்கும் தலையாய கடமை மண்ணில் பிறந்த மகத்தான மனிதர்கள் மாவீரர்கள் ஆனால் அவர்களது கனவுகளையும் தியாகங்களையும் கொச்சைப்படுத்தி சுயநலவாத வியாபார அரசியல் செய்து கொண்டிருக்கும் ஒரு சிலர் இந்த மாவீரர் நாள் என்பதை தங்களது சுயவிளம்பரத்துக்காய் பயன்படுத்துவதும் தேசியத்தலைவருக்கு சமனாக தம்மை அடையாளப்படுத்த எத்தனிப்பதும் வேதனையே உன்மையிலே தமிழினம் ஒன்றைமட்டும் மறக்கக்கூடாது வாழவேண்டிய வயதிலே தங்களையே இந்த மண்ணுக்காய் அர்பனித்தவர்கள் மாவீரர்கள் அவர்களது கோரிக்கைகள் அவர்களது கனவுகள் நிறைவேற்றப்படாத வரைக்கும் நாங்கள் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தவதாலும் மாவீரர் நாளினை நினைவுகூருவதாலும் எந்த பயனும் இல்லை! உன்மையிலே அவர்களுக்கு நாம் செய்கின்ற நன்றி அஞ்சலி என்பது அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்வரை போராடவேண்டும் அவர்களது கனவுகள் நிறைவேற்றப்படும்வரை போராடவேண்டும்.

ஒரு விளக்கினை ஏற்றி விம்மி விம்மி அழுவதால் எந்த பயனும் இல்லை ஒருசில அரசியல் வாதிகள் ஐநா சபையிலே உள்ளகவிசாரணைக்கு ஆதரவாக துரோகத்தனமாக வாக்களித்துவிட்டு இங்கே தேசியத்தலைரைப்போல தம்மை காட்டிக்கொள்ள எத்தணிப்பது எவளவு கேவலமான நிலை இவ்வாறன செயற்பாடுகள் இனியேனும் நிறுத்தப்படவேண்டும் நிளல் எது நிஜம் எது என்பதை தமிழர்கள் புரிந்துகொல்ளவேண்டும் தமிழர்கள் போராட்டம் உக்கிரம் கொள்கின்ற காலங்களில் அதை திசைதிருப்பி பல வேகத்தடைகளை போடுவதில் சிங்களத்தலமைகள் மகா கொட்டிக்காறர்கள் அவர்களோடு சில தமிழ் அரசியல்வாதிகளும் இன்று கைசேர்த்து நிற்கின்றார்கள் என்பது வேதனையே

இவற்றையெல்லாம் தாண்டி போராடவேண்டியது இன்று தமிழர்களின் கடமை என்று எமது போராட்டம் வெற்றிபெறுகின்றதோ என்று எமது மாவீரர்களின்
கோரிக்கைகள் நிறைவேற்றப்படுகின்றதோ அன்றுதான் நாம் உன்மையான மாவீரர் நாள் அனுஸ்டிப்பதற்கு தகுதியானவர்கள் அதுவே நாம் அந்த சுயநலமற்ற
வீர்ப்புதல்வர்களுக்கு செலுத்தும் உன்மையான அஞ்சலி இதனை எப்போது செய்யப்போகின்றோம்

- ஆதி