மாவீரர் நினைவு சுமந்த மெய்வல்லுநர் போட்டிகள்! - பிரான்ஸ்

யூலை 10, 2017

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு – தமிழர் விளையாட்டுத் துறையினால் வருடாந்தம் நடாத்தப்படும் கழகங்களிடையேயான தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த மெய்வல்லுநர் போட்டிகள் – 2017 பாரிசின் புறநகர்ப் பகுதியான செவ்றோன் பகுதியில் உள்ள மைதானத்தில் 09.07.2017 ஞாயிற்றுக்கிழமை காலை 09.30 மணிக்குத் தெரிவு மற்றும் இறுதிப் போட்டிகளாக ஆரம்பமாகியுள்ளன.

இந்நிகழ்வில் மாவீரர் திருஉருவப்படத்திற்கான ஈகைச்சுடரினை 19.08.1989 அன்று மாங்குளத்தில் இந்திய இராணுவத்தினருடனான மோதலின்போது வீரச்சாவடைந்த கப்டன் வண்ணன் அவர்களின் சகோதரி ஏற்றிவைத்து மலர்வணக்கம் செலுத்தினார்.

அகவணக்கத்தைத் தொடர்ந்து போட்டிகள் இடம்பெற்றன. ஓட்டம், பந்தெறிதல், நீளம் பாய்தல், முப்பாய்ச்சல், கயிறடித்தல், நின்றுபாய்தல் என பல்வேறு போட்டிகளும் பிரிவு அடிப்படையில் இடம்பெற்றிருந்தன.

அரியாலை ஐக்கிய கழகம், நல்லூர் ஸ்தான் வி.க., யாழ்ட்டன் வி.க., தமிழர் வி.க. 93, ., தமிழர் வி.க. 94, ., தமிழர் வி.க. 95 ஆகிய கழகங்களிடையே போட்டிகள் விறுவிறுப்பாக இடம்பெற்றன.

ஆரம்பத்தில் சீரான காலநிலை நிலவியபோதும் மாலை மழைக்கு மத்தியிலும் திட்டமிட்டவாறு விளையாட்டுக்கள் சிறப்பாக இடம்பெற்றிருந்தன. அத்துடன் தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த உதைபந்தாட்டப்போட்டிகளின் மூன்றாம் இடத்துக்கான போட்டியும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. வழமைபோன்று தமிழீழ உணவகத்தினரும் தமது சேவையை சிறப்பாக வழங்கியிருந்தனர்.

தெரிவு மற்றும் இறுதிப்போட்டிகள் 15.07.2017 சனிக்கிழமையும் இறுதிப்போட்டிகள் 16.07.2017 ஞாயிற்றுக்கிழமையும் சார்சல் நெல்சன் மண்டேலா மைதானத்தில் (CENTRE SPORTIF NELSON MANDELA AVENUE PAUL LANGEVIN 95200 SARCELLES)உணர்வெழுச்சியுடன் இடம்பெறவுள்ளது.

இறுதிப்போட்டிகள் இடம்பெறும் 16.07.2017 ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த உதைபந்தாட்டப் போட்டிகளின் இறுதிப்போட்டியும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வுகளில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்புவிடுத்துள்ளனர்.

ஊடகப்பிரிவு – பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு.

இணைப்பு: 
செய்திகள்
செவ்வாய் April 17, 2018

அண்மைய காலங்களில் கனடிய தமிழர், தாயக தமிழரிடம் எமக்கென்றான வரலாறு வாழ்க்கை முறை சார்ந்த திரைப்படத்துறையினைக் கட்டியெழுப்புதலில் ஆர்வம் மிகுந்து கிடப்பது வரவேற்கத்தக்கதாகும்.  இன்று ஒட்டாவாவில் நடைப