மாவீரர் நினைவு தூபி திரை நீக்க நினைவேந்தலுக்கான அழைப்பு!

Tuesday May 16, 2017

தமிழீழ கனவுகளை நெஞ்சில் சுமந்து காற்றோடு கலந்த எம் மண்ணின் மைந்தர்களை நினைவுகூறும் முகமாக கார்ஜ்-சார்சல் தமிழ் சங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க சார்சல் மாநகர சபை உதவியுடன் நிறுவப்பட்ட மாவீரர் நினைவு தூபி திரை நீக்கும் நிகழ்வு 17-05-2017  நடைபெறவுள்ளது.

இந்நிகழ்விற்கு சார்சல் நகர பிதா சிறப்பு வருகையாளர் ஆகவும் அவரோடு  இன்றைய பல பிரஞ்சு அரசியல் பிரமுகர்களும் கலந்து நினைவேந்த உள்ளார்கள்.தமிழ்ச்சங்க மாணவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சிகளும், முள்ளிவாய்க்கால் நினைவாக இறுதி யுத்த காலத்தில் எமது மக்கள் உணவாக அருந்திய  இலைக்கஞ்சி உணவு வழங்கும் நிகழ்வும் நடைபெறவுள்ளது.

எங்கள் துயர்க்காலத்தை என்றும் மறக்காது நினைவுகூர அனைவரையும் உரிமையுடன் அழைக்கின்றோம்.

இடம்:  நெல்சன் மண்டேலா விளையாட்டு மைதானம் , சார்சல்
            Centre Sportif Nelson Mandela
            Avenue Paul Langevin
             95200 Sarcelles
காலம்: 17/05/2017
நேரம்: பிற்பகல் 2.00 மணி

            மாண்டவர் நினைவுடன்,
கார்ஜ்-சார்சல் தமிழ் சங்க நிர்வாகம்

தொடர்புகளுக்கு:-
01 43 15 04 21(cctf)

தகவல்:-தமிழர் ஒருங்கிணைப்புக் குழு - பிரான்சு