மாவீரர் வாரம் ஆலய வழிபாடும் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையும்!

Friday November 17, 2017

மாவீரர் மாதமான கார்த்திகை மாதத்தை முன்னிட்டு, மாவீரர்  வாரத் தொடக்க நாளான  கார்த்திகை 20.11.17 முதல் 27. 11.17 வரை இந்து ஆலயங்களிலும்.  தேவாலயங்களிலும். ஆத்ம சாந்திப்  பிரார்த்தனைகளையும்,பூசை வழிபாடுகளையும் மேற்கொள ;ளுமாறு கனடியத் தமிழர் நினைவெழுச் சி அகவம் கேட்டுக்கொள்கின்றது.

எமது மண்ணின் விடிவுக்காகத் தம்மைக் கொடை செய்த எமது பிள்ளைகளுக்காகவும் . ஈழ விடுதலைப் போரில்  மரணமடைந்த அனைத்து மக்களின் ஆத்ம சாந்திக்காகவும்  தாயகத்தில் இன்றுவரை துயர் சுமந்து வாழும்   எமது உறவுகளின் நல்  வாழ்வுக்காகவும் ஈழத் தமிழ் மக்கள் அனைவரையும் ஆலயங்களுக்குச்  சென்று பிரார்த்தனை செய்யுமாறு கனடியத் தமிழர் நினைவெழுச்சி அகவம்  கேட்டுக் கொள்கின்றது.